Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் மறுத்துவிடுவேன்… பிரபல இயக்குநர் பேச்சு

Director Anurag Kashyap: பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவர் பாலிவுட் சினிமாவில் இயக்குநராக பிரபலமாக இருந்தாலும் தென்னிந்திய சினிமாவில் நடிகராக பிரபலமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் மறுத்துவிடுவேன்… பிரபல இயக்குநர் பேச்சு
ஷாருக்கான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jan 2026 16:35 PM IST

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரை பாலிவுட் பாட்சா என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்திய சினிமாவின் அடையாளமாக வலம் வரும் நடிகர் ஷாருக்கான் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான தீவானா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல நூறு படங்களில் நடித்த நடிகர் ஷாருக்கான் இந்தி சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இவருக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிகர்களின் பட்டாளம் அதிகம் என்றே சொல்லலாம். தொடர்ந்து இந்தி மொழியில் நாயகனாக நடித்து வரும் ஷாருக்கான் அவ்வபோது தென்னிந்திய மொழிகளில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் 5 நிமிட காட்சியில் நடித்து இருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டங்கி. இந்தப் படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கிங். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் இந்த 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் மறுத்துவிடுவேன்:

இந்த நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது, என் படத்தில் ஒரு பெரிய நட்சத்திரத்தை நடிக்க வைத்தால், எனக்குப் பெரிய பட்ஜெட்டும் அதிக சம்பளமும் கிடைக்கும், ஆனால் நான் எனது சுதந்திரத்தை இழந்துவிடுவேன். நாங்கள் எங்கள் தொலைநோக்குப் பார்வையை இழந்துவிடுவோம். ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், நான் அதைச் செய்ய மாட்டேன். ஏனென்றால், அவருக்குப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஏதாவது தவறாக நடந்தால், அவருடைய ரசிகர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று கலகலப்பாக பேசியுள்ளார்.

Also Read… நியூ இயர் ஸ்பெஷல்… போஸ்டர்களை வெளியிடும் டாப் நடிகர்களின் படக்குழு

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இந்த வருஷம் செமய இருக்கும்… கருப்பு படம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி