இந்த வருஷம் செமய இருக்கும்… கருப்பு படம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி
Karuppu Movie Update: நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்று வெயிட்டிங்கிள் இருந்த ரசிகர்களுக்கு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ஒரு மகிழ்ச்சியான செய்தியை தற்போது வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படம் 80களில் நடப்பது போலா காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 45-வது படத்திற்காக நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு கருப்பு என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து உள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பின்பு இவர்களின் கூட்டணி மீண்டும் திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவளுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து இதுவரை ஒரு பாடல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருப்பு படம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி:
அதன்படி படத்தின் படப்பிடிப்பை படக்குழு முன்னதாகவே முடித்து இருந்த நிலையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கே படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் வெளியாகவில்லை தொடர்ந்து பொங்கலுக்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பொங்கலுக்கும் படம் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கருப்பு படத்திற்காக உங்கள் காத்திருப்புக்கு மதிப்புள்ளதாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். மேலும் இந்த வருஷம் செமய இருக்கும் என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Happy Newyear !!!❤️❤️
இந்த வருஷம் செமய இருக்கும் !!!🔥🔥#Karuppu will be worth your wait !!!🖤🖤 pic.twitter.com/ttStUalxfz— RJ Balaji (@RJ_Balaji) January 1, 2026



