முத்து பட வீடியோ உடன் புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்… வைரலாகும் பதிவு!
Rajinikanths New Yeas Wishes: உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று மகிழ்ச்சியுடன் புதிய ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது ரசிகர்களுக்கும் மக்களும் முத்து படத்தின் வீடியோவைப் பகிர்ந்து தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஸ்னல் சார்பாக நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இயக்குநர் வெளியேறினார். இதன் காரணமாக இந்தப் படத்தை யார் இயக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் 2026-ம் ஆண்டிற்கான புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். ஒருவொருக்கு ஒருவொவர் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவரது நடிப்பில் வெளியான முத்து படத்தில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டு தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.




முத்து பட வீடியோ உடன் புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்:
அந்த வீடியோவில், நா எப்பவுமே போற ரூட் பத்தி கவலை படுறதே கிடையாது. ஆண்டவன் மேல பாறத்தை போட்டு வண்டி எந்த ரூட்ல போகுதோ சிவானு சொல்லி போக வேண்டிதான் என்ற வசனத்துடன் தனது புத்தாண்டு வாழ்த்தை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸில் கம்ருதின் குறித்து புறணி பேசும் பார்வதி மற்றும் சாண்ட்ரா – வைரலாகும் வீடியோ
ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
— Rajinikanth (@rajinikanth) January 1, 2026
Also Read… டாக்ஸிக் படத்தில் நடிகை நயன்தாராவின் கதாப்பாதிரம் இதுதான் – படக்குழு வெளியிட்ட அறிவிப்பு