AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த 8 ரயில்களும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Eight trains to halt at Mambalam station: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக 8 அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்த 8 ரயில்களும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Feb 2026 17:19 PM IST

சென்னை, பிப்ரவரி 21 : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக 8 அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்படும் 10 மற்றும் 11வது பிளாட்பாரங்களில் பணிகள் தொடங்கப்படவிருப்பதால் புற நகர் ரயில்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்

இதன் காரணமாக வழக்கமாக 10 மற்றும் 11வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும் புற நகர் மின்சார ரயில்கள் ஏப்ரல் 5, 2026 நள்ளிரவு வரை 45 நாட்களுக்கு 5 மற்றும் 6 வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும் என அறிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 20, 2026 அன்று முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் நடைமேடை 6ல் இருந்து செல்லும்.

இதையும் படிக்க : மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் கட்டணம்… ரயில்வே வெளியிட்ட திடீர் அறிவிப்பு… சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!

அதே போல அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து மின்சார ரயில்களும் நடைமேடை 5ல் இருந்து இயக்கப்படும் எஎன குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது உள்ள மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மாற்றப்பட்ட நேரங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த 45 நாட்களில் கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் ரயில்களுக்கு இனி ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 84 ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்தும், 80 ரயில்கள் செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்தும், இரு மார்க்கமும் புதிய எண்கள் மற்றும் கால அட்டவணையுடன் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க : 27 கொண்டை ஊசி வளைவுகள்.. யானைகள்-புலிகள் நிறைந்த சுற்றுலா தலம்.. திகிலூட்டும் அனுபவத்துக்கு இங்க போங்க!

இந்த 8 ரயில்களும் இனி மாம்பலத்தில் நிற்கும்

இந்த நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடைகள் 10 மற்றும் 11 ஆகியவற்றில் பராமரிப்பு பணிகல் நடைபெற்று வருவதன் காரணமாக 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி சென்னை எழும்பூர் – திருச்சி சோனன் அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூர் – புதுச்சேரி விரைவு ரயில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூர் – மதுரை பாண்டியன் அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூர் – மன்னார்குடி விரைவு ரயில், சென்னை எழும்பூர் – சேலம் அதிவிரைவு ரியல் ஆகிய 8 அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்கள் பிப்ரவரி 22, 2026 ஞாயிற்றுக்கிழமை முதல் ஏப்ரல் 6, 2026 வரை மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.