AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிகாலையில் தொடரும் பனிமூட்டம்.. படிப்படியாக உயரும் வெப்பநிலை.. வானிலை சொல்வது என்ன?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அதிகாலையில் தொடரும் பனிமூட்டம்.. படிப்படியாக உயரும் வெப்பநிலை.. வானிலை சொல்வது என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Feb 2026 06:34 AM IST

வானிலை நிலவரம், பிப்ரவரி 8, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்த நிலையில், அதனைத் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பதிவாகாமல், பகல் நேர வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், பிப்ரவரி 8, 2026 அன்று தமிழகத்தில் வறண்ட வானிலை இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த வானிலை பிப்ரவரி 13ஆம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை:

மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், மாலை மற்றும் இரவு, அதிகாலை நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லாமல் தொடர்ந்து வருகிறது.

மேலும் படிக்க: ‘விருதுநகரில் மாநாடு நடத்தினால் வெற்றி, அடுத்த தேர்தலில் வெற்றி உறுதி…. மு.க.ஸ்டாலின் பகிர்ந்த சுவாரசியத் தகவல்

அதிகாலையில் தொடரும் பனிமூட்டம்:

அதேபோல், நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், வரக்கூடிய நாட்களில் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை ஒரு சில இடங்களில் படிப்படியாக உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பாகவே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் மட்டும் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் வெப்பநிலை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் வெட்டிக்கூட்டம் சுற்றுகிறது… அதனால் யாருக்கும் பலனில்லை… உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 34.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரை 33.6 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டை 33.4 டிகிரி செல்சியஸ் மற்றும் கன்னியாகுமரி 33.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளன.

சென்னையைப் பொருத்தவரையில், மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 31.2 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 30.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us