கடல் நீரை குடிநீராக மாற்றும் செயல்முறையில் கிடைக்கும் அதிக உப்பு கலந்த நீரையும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஜப்பான் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. 'ஆஸ்மோட்டிக் பவர்' அல்லது 'புளூ எனர்ஜி' எனப்படும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம், ஜப்பானின் புகுவோகா நகரில் உலகின் இரண்டாவது ஆஸ்மோட்டிக் மின் உற்பத்தி நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.