AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாமகவில் மீண்டும் பூகம்பம்.. அன்புமணிக்கு எதிராக அருள் தரப்பினர் போர்க்கொடி!

PMK leader Anbumani: பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது என்று அந்த கட்சியை சேர்ந்த அருள் தரப்பினர் போர் கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக அருள் பல்வேறு காரணங்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

பாமகவில் மீண்டும் பூகம்பம்.. அன்புமணிக்கு எதிராக அருள் தரப்பினர் போர்க்கொடி!
பாமக அருள் பேட்டி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 16 Jul 2026 15:16 PM IST

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்பு மணி இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வெகு நாட்களாக நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருமுறை ராமதாசை, அன்புமணி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இந்த நிலையில், ராமதாஸ் தரப்பை சேர்ந்த சேலம் முன்னாள் எம்எல்ஏ அருள் அன்புமணி மீது கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், அருள் சேலத்தில் தனது ஆதரவாளர்களுடன் இன்று வியாழக்கிழமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான இளங்கோ என்பவர் என்னை தொடர்பு கொண்டு அதிமுகவில் இணையுமாறு கூறினார். இதே போல, திமுகவை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் அந்த கட்சியில் இணையுமாறு வலியுறுத்தினார்.

அன்புமணிக்கும், ஜான் ஆரோக்கியசாமிக்கும் உறவு

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய கோரி பலர் முயற்சி செய்தனர். அப்போது, அன்புமணிக்கும், ஜான் ஆரோக்கியசாமிக்கும் உறவை பயன்படுத்தி தடுத்து நிறுத்தினார். தற்போது, அவர்களும் அந்த கதவை திறந்து வைத்துள்ளனர். எனவே, எங்களது முடிவை நாங்கள் விரைவில் அறிவிப்போம். நாங்கள் புதிதாகவும் கட்சி ஆரம்பிக்கலாம். அல்லது எங்களை அழைத்த கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியில் இணைந்து பயணிக்கலாம். வருங்காலங்களில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம்.

மேலும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் பேட்மிண்டன் விளையாடிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..

அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை

வாழ்க்கை முழுவதும் அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. மருத்துவர் ராமதாசுடன் இருந்தவர்கள் யாரும் அன்புமணியை தலைவராக ஏற்க விரும்பவில்லை. இதேபோல, வன்னியர் சமுதாய மக்களும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும். வன்னியர்களை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்ற அன்புமணியை தமிழக மக்களும் புறக்கணிக்க வேண்டும். எங்களை பொறுத்தவரை நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் கிடையாது.

அன்புமணியை கண்டு வன்னியர்கள் ஏமாறக் கூடாது

பொறுப்பாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அவர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும். ராமதாஸ் ஓய்வு பெற்றுள்ளார். இதனால், பாட்டாளி மக்கள் கட்சிக்கு அடுத்து யார் தலைவர் என்றால் அன்புமணியை ஏற்றுக்கொள்ள முடியாது. அன்புமணியை கண்டு வன்னியர்கள் ஏமாறக்கூடாது. மருத்துவர் ராமதாஸ் கூறியபடி அன்புமணி ஒரு நடிகர், அவரது தாயை தாக்கி உள்ளார். தற்போது, தந்தையும், மகனும் இணைந்ததை நாங்கள் பாராட்டுகிறோம். தலைவராக இருந்தது எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா?.. குதிரை பேர வழக்கு சிபிஐக்கு மாறுமா?.. தீர்ப்பை தள்ளி வைத்த உயர் நீதிமன்றம்!

Follow Us