AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்.. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது.. கூட்டத்தில் திட்டவட்டம்!

Karnataka Cauvery Water: கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட முடியாது என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் இந்த கருத்தை அரசு அதிகாரிகள் முன் வைத்தனர்.

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்.. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது.. கூட்டத்தில் திட்டவட்டம்!
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசு மறுப்பு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 15 Jul 2026 21:53 PM IST

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக டெல்லியில் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 15) கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிரி படுகையில் கடுமையான நீர் பற்றாக்குறை நிலவி வருவதன் காரணமாக தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று அந்த மாநிலத்தின் நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை என்றும் நீர் தேக்கங்களுக்கு நீர்வரத்து கொஞ்சம் கூட இல்லை என்றும் கர்நாடகா அதிகாரிகள் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவிடம் தெரிவித்தனர். ஜூலை மாதத்தில் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்துள்ளது. மேலும், அணைகளில் குறைந்த அளவு தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. ஆனால், பருவமழை மீண்டும் வலுப்பெறும் என்பதற்கு எந்த முன்னறிவிப்பும் இல்லை. தற்போது சேமிக்கப்பட்டுள்ள தண்ணீரை குடிநீராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

குடிப்பதற்கு மட்டுமே தண்ணீர் போதுமானதாக உள்ளது

மேலும், கர்நாட மாநில அணைகளில் தண்ணீர் சேமிக்கப்படவில்லை. தற்போது கிடைக்கும் தண்ணீரும் குடிப்பதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. எனவே, கர்நாடகா இதற்கு முன் கண்டிராத மலை பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது என அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்று தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் படிக்க: தூத்துக்குடியில் தொழிலாளி கொடூர கொலை வழக்கு.. தலைமறைவான 5 பேரை சுற்றி வளைத்த போலீசார்.. பரபரப்பு பின்னணி!

தமிழகம் -கர்நாடகம் இடையே வாதம்

இதற்கு மத்திய நீர் மீட்பு குழு எந்த மாநிலத்துக்கும் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குழு குறிப்பிட்டதோடு அடுத்த கூட்டம் ஜூலை 28- ஆம் தேதி நடைபெறும் என்று ராமலிங்க ரெட்டியின் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்த மழைப்பொழிவு மற்றும் நீர் இருப்பு குறைவாக உள்ளதை காரணம் காட்டி கர்நாடக காவிரி நீரை தமிழகத்துக்கு விடுவிக்க மறுத்த நிலையில் தமிழ்நாடு அரசு அந்த கோரிக்கையை முன் வைத்ததை தொடர்ந்து இந்த விவாதம் ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள காவிரி நதிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் கர்நாடகா மற்றும் தமிழகத்துக்கு 177.75 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018- ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அந்த ஆண்டு அந்த தீர்ப்பின் அடிப்படையில் நீரின் பங்கை தமிழகத்தின் விலை குண்டுளுவில் உள்ள கிருஷ்ணராஜர் சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து 15 நாட்களுக்கு தினமும் 5000 குசெக் தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இரு கார்கள் நேருக்கு நேர் மோதல்.. குறுக்கே சென்ற மாமியார்- மருமகள் நேர்ந்த துயரம்.. புதுக்கோட்டையில் பெருஞ்சோகம்!

Follow Us