AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஹேக்கர்கள் கைவரிசை.. 19 ஆயிரம் ரகசிய ஆவணங்கள் கசிந்தன.. அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Kudankulam Nuclear Power Plant : தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஹேக்கர்கள் கைவரிசையால் சுமார் 19 ஆயிரம் ரகசிய ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. இதனால், கூடங்குளம் தொடர்பான பாதுகாப்புகள் கேள்விக்குறியாகி உள்ளது .

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஹேக்கர்கள் கைவரிசை.. 19 ஆயிரம் ரகசிய ஆவணங்கள் கசிந்தன.. அதிர்ச்சியூட்டும் பின்னணி!
கூடங்குளம் அணுமின் நிலையம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 15 Jul 2026 19:10 PM IST

இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் ரஷ்ய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட நீர் அழுத்த அணு உலைகளில் மொத்தமாக 7 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகளில் தலா ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணு உலைகள் முழுமையாக செயல்பாட்டில் இருந்து வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணுமின் நிலையத்தின் உள் கட்டமைப்பு மற்றும் சப்ளையர்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேர்ல்ட் லீக்ஸ் என்ற ஹேக்கர்கள் குழு இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் தொடர்பான ஏராளமான கோப்புகளை டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அணுமின் நிலையத்தின் ரகசிய ஆவணங்கள் கசிவு

இதில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரைபடங்கள் மற்றும் அணுமின் நிலையம் தொடர்பான விநியோகஸ்தர்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய ரகசிய கோப்புகள் டார்க் வெப் இணையதளத்தில் கசிந்துள்ளது. இந்த தரவுகள் அனைத்தும் பிரபல தொழிலதிபரான அணில் அம்பானிக்கு தொடர்புடையதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அணில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் கூறுகையில், 3- ஆம் தர இந்திய தரவு மையத்தின் சேவை நிறுவனமான யோட்டாவின் சர்வரில் இருந்து சிறிதளவு தரவுகள் கசிந்துள்ளன.

மேலும் படிக்க: தூத்துக்குடியில் தொழிலாளி கொடூர கொலை வழக்கு.. தலைமறைவான 5 பேரை சுற்றி வளைத்த போலீசார்.. பரபரப்பு பின்னணி!

ரகசிய ஆவணம் கசிவு தொடர்பாக அரசுக்கு தகவல்

இது தொடர்பாக அரசுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எந்த தரவுகள் கசிந்தன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை ரிலையன்ஸ் குழுமம் வெளியிடவில்லை. வேர்ல்ட் லீக்ஸ் இணையதளத்தில் கசிந்துள்ள 8 லட்சத்து 58 ஆயிரம் ரிலையன்ஸ் கோப்புகளில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு சொந்தமான 19 ஆயிரம் ரகசிய கோப்புகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கோப்புகள் கடந்த 2016- ஆம் ஆண்டு முதல் 2025- ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தை சேர்ந்தவை என்றும் தகவல்கள் கூறுகின்றன. இருந்தாலும், இதற்கான தெளிவான விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

19 ஆயிரம் வகையான ஆவணங்கள் கசிவு

அந்த கோப்புகளில் அணு மின் நிலைய காற்று வெளியேற்றும், குளிரூட்டும் அமைப்பு, தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் 112 மில்லியன் டாலர் காப்பீடு பாலிசிகள், பொது கட்டுப்பாட்டு அறைக்கான லேஅவுட்டுகள், கருவிகள் பரிசோதனை விவரம், மின் நிலையத்தின் பொருள்களின் புகைப்படங்கள், விநியோகஸ்தர்களின் பட்டியல்கள், அணுசக்தி கழகம் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து நடத்தவிருந்த ஆய்வுகள் குறித்த பதிவுகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: இரு கார்கள் நேருக்கு நேர் மோதல்.. குறுக்கே சென்ற மாமியார்- மருமகள் நேர்ந்த துயரம்.. புதுக்கோட்டையில் பெருஞ்சோகம்!

Follow Us