அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு!
AIADMK District Secretaries Meeting: அதிமுக பாெதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஜூலை 20- ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் கட்சியின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் 6 நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை ராயப்பேட்டை ஔவை சண்முகம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் வருகிற 20- ஆம் தேதி முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், வருகிற 20- ஆம் தேதி ( திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை மாநகர், 11:30 மணிக்கு ராமநாதபுரம், மாலை 4:30 மணிக்கு மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஜூலை 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு தென்காசி வடக்கு மற்றும் தென்காசி மேற்கு, 11:30 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு மற்றும் கன்னியாகுமரி மேற்கு, மாலை 4:30 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் தூத்துக்குடி தெற்கு.
திருப்பூர்- நாமக்கல்- கோயம்புத்தூர் மாவட்டம்
இதேபோல, 22- ஆம் தேதி ( புதன்கிழமை) காலை 10 மணிக்கு திருப்பூர் மாநகர் மற்றும் திருப்பூர் புறநகர் மேற்கு, காலை 11 மணிக்கு திருப்பூர் புறநகர் கிழக்கு. மாலை 4 மணிக்கு நாமக்கல், மாலை 5:30 மணிக்கு வடசென்னை தெற்கு ( கிழக்கு), வடசென்னை தெற்கு ( மேற்கு). 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கோயம்புத்தூர் மாநகர், கோயம்புத்தூர் புறநகர் வடக்கு, 11:30 மணிக்கு கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மற்றும் கோயம்புத்தூர் புறநகர் மத்தியம். மாலை 4 மணிக்கு திண்டுக்கல் கிழக்கு மற்றும் திண்டுக்கல் மேற்கு, 5:30 மணிக்கு வடசென்னை வடக்கு ( கிழக்கு) மற்றும் வடசென்னை வடக்கு ( மேற்கு).
மேலும் படிக்க: தூத்துக்குடியில் தொழிலாளி கொடூர கொலை வழக்கு.. தலைமறைவான 5 பேரை சுற்றி வளைத்த போலீசார்.. பரபரப்பு பின்னணி!




விழுப்புரம்- திருவாரூர்- கள்ளக்குறிச்சி மாவட்டம்
ஜூலை 24- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விழுப்புரம், 11:30 மணிக்கு திருவாரூர் மாலை 4:30 மணிக்கு சேலம் மாநகர் மற்றும் சேலம் புறநகர். ஜூலை 25- ஆம் தேதி ( சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி, 11 30 மணிக்கு தென் சென்னை வடக்கு ( கிழக்கு) மற்றும் தென் சென்னை தெற்கு ( கிழக்கு), மாலை 4 மணிக்கு தென் சென்னை வடக்கு ( மேற்கு) மற்றும் தென் சென்னை தெற்கு ( மேற்கு), மாலை 5:30 மணிக்கு சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் கட்சியின் வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவை தொடர்ந்து அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்து வருகின்றனர். இதனால், கட்சியை பலப்படுத்தும் நோக்கிலும், வளர்ச்சிை குறித்தும் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: இரு கார்கள் நேருக்கு நேர் மோதல்.. குறுக்கே சென்ற மாமியார்- மருமகள் நேர்ந்த துயரம்.. புதுக்கோட்டையில் பெருஞ்சோகம்!