இரு கார்கள் நேருக்கு நேர் மோதல்.. குறுக்கே சென்ற மாமியார்- மருமகள் நேர்ந்த துயரம்.. புதுக்கோட்டையில் பெருஞ்சோகம்!
Pudukkottai Accident Two Died: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடூர விபத்தில் கார்களின் இடையே சிக்கிய மாமியார் மற்றும் மருமகள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள கிரா5மத்தை சேர்ந்தவர் சாந்தி. இவர், தனது மாமியார் வீராயியுடன் இரு சக்கர வாகனத்தில் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த இரு கார்கள் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், எதிர்பாராத விதமாக இரு கார்களுக்கு இடையே சாந்தி ஓட்டி சென்ற ஸ்கூட்டர் சிக்கிக்கொண்டது. இதில், ஸ்கூட்டர் அப்பளம் போல நொறுங்கியது. இந்த கொடூர விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற வீராயி மற்றும் சாந்தி ஆகியோர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்தனர். உடனே, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இரு பெண்களையும், காரில் பயணித்தவர்களையும் மீட்டுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக கீரனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற போலீசார் அவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாமியார் – மருமகள் பரிதாபமாக உயிரிழப்பு
அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் வீராயி மற்றும் சாந்தி ஆகியோர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். காரில் பயணத்தில் காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: தூத்துக்குடியில் தொழிலாளி கொடூர கொலை வழக்கு.. தலைமறைவான 5 பேரை சுற்றி வளைத்த போலீசார்.. பரபரப்பு பின்னணி!




கீரனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
இந்த விபத்து தொடர்பாக சாந்தியின் கணவர் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்குள்ளான இரு கார்களின் ஓட்டுனர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இடையில் சிக்கிய மாமியார் மற்றும் மருமகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மட்டும் இன்றி, அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கீரனூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்
கீரனூர் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்துக்குள்ளான கார்கள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சாலை விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வீ தி லீடர்ஸ் அமைப்பின் திருச்செந்தூர் மாநாடு திடீர் ரத்து.. காரணம் என்ன.. அண்ணாமலை வெளியிட்ட முக்கிய தகவல்!