AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சினிமா பாணியில் நடந்த “சேசிங்”.. GUN பாயிண்டில் ஏ பிளஸ் ரவுடி அரஸ்ட்.. பரபரப்பில் சென்னை!

Chennai Police Arrested Rowdy: சென்னையில் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த ஏ பிளஸ் ரவுடியை ஓட்டேரி போலீசார் துப்பாக்கி முனையில் அதிரடியாக கைது செய்தனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சினிமா பாணியில் நடந்த “சேசிங்”.. GUN பாயிண்டில் ஏ பிளஸ் ரவுடி அரஸ்ட்.. பரபரப்பில் சென்னை!
துப்பாக்கி முனையில் கைதான ரவுடி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 15 Jul 2026 21:15 PM IST

சென்னை மாவட்டத்தின் புறநகர் பகுதியான ஓட்டேரியை சேர்ந்தவர் சிலம்பு என்ற சிலம்பரசன். இவர் மீது, அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக, சிலம்பரசன் ஏ ப்ளஸ் ரவுடிகள் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிலம்பரசன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்திருந்தார். அவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகாமல் இருந்தவுடன் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. அதன் அடிப்படையில், போலீசார் ஏ பிளஸ் ரவுடி சிலம்பரசன் பதுங்கி இருக்கும் இடம் தொடர்பாக போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அவர் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் பதுங்கி இருந்து வந்தது தெரிய வந்தது.

தப்பியோடிய ரவுடி துப்பாக்கி முனையில் கைது

அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற ஓட்டேரி போலீசார் ரவுடி சிலம்பரசனை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். ஆனால், அவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே, அவரிடம் போலீசார் எச்சரிக்கும் அவர் கேட்கவில்லை என்று தெரிகிறது. உஷாரான போலீசார் பாதுகாப்புக்காக வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து சிலம்பரசன் நோக்கி குறி வைத்து போலீசார் எச்சரித்தனர். இதை பார்த்த சிலம்பரசன் அச்சமடைந்து காவலரிடம் சரணடைந்தார்.

மேலும் படிக்க: தூத்துக்குடியில் தொழிலாளி கொடூர கொலை வழக்கு.. தலைமறைவான 5 பேரை சுற்றி வளைத்த போலீசார்.. பரபரப்பு பின்னணி!

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

இதைத் தொடர்ந்து, அவரை போலீசார் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது, அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, செல்போன், ஒரு கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலை உள்ளிட்ட வழக்குகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சினிமா பாணியில் நடந்த சேசிங் சம்பவம்

சென்னையில் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த ஏ பிளஸ் ரவுடியை  போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்று துப்பாக்கி முனையில் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: இரு கார்கள் நேருக்கு நேர் மோதல்.. குறுக்கே சென்ற மாமியார்- மருமகள் நேர்ந்த துயரம்.. புதுக்கோட்டையில் பெருஞ்சோகம்!

Follow Us