40,000 கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம் 2026.. ரூ.1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை
கடந்த 20 ஆண்டுகளில், 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2.6 லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் ஈஷா கிராமோத்சவத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த முயற்சிக்கு இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 'தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பு' என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
ஜூலை 15, 2026: சத்குருவின் ஈஷா அறக்கட்டளை ஆண்டுதோறும் நடத்தி வரும் இந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான ‘ஈஷா கிராமோத்சவம் 2026’, இந்த ஆண்டு 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரியுடன் இணைந்து, உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த முறை சுமார் 40,000 கிராமங்களைச் சேர்ந்த 7,000 அணிகளில் இருந்து 80,000-க்கும் மேற்பட்ட வீரர்கள், அதில் 15,000-க்கும் மேற்பட்ட பெண்கள், பங்கேற்க உள்ளனர்.
ஆண்களுக்கான கைப்பந்து மற்றும் பெண்களுக்கான எறிபந்து போட்டிகள் கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிச்சுற்று என மூன்று கட்டங்களாக நடைபெறும். கிளஸ்டர் போட்டிகள் ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளன. இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 6-ஆம் தேதி கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெறவுள்ளன.
போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசு:
இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சம், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சம், மூன்றாம் இடத்திற்கு ரூ.1 லட்சம், நான்காம் இடத்திற்கு ரூ.50,000 பரிசாக வழங்கப்படும். கிளஸ்டர் மற்றும் டிவிஷனல் சுற்றுகளிலும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. மொத்தமாக ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
ஈஷா கிராமோத்சவ ஒருங்கிணைப்பாளர் சுவாமி புலகா கூறுகையில், ஆண்டுதோறும் இந்த போட்டி அளவிலும் தாக்கத்திலும் வளர்ந்து வருவதாகவும், கிராமப்புற விளையாட்டு வீரர்களின் திறமைகளை தேசிய அளவில் வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக இது அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தொழில்முறை வீரர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், கிராமப்புற இளைஞர்களுக்கே இந்தப் போட்டி முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஈஷா கிராமோத்சவம் நிகழ்ச்சி:
கடந்த 20 ஆண்டுகளில், 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2.6 லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் ஈஷா கிராமோத்சவத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த முயற்சிக்கு இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ‘தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பு’ என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
ஈஷா கிராமோத்சவம் 2026-க்கான பதிவுகள் தொடங்கியுள்ளன. தகுதியுள்ள கிராமப்புற வீரர்கள் ishagramotsavam.sadhguru.org இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு 83000 30999 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.