AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கலகல காமெடியில் சந்தீப் கிஷன் நடிப்பில் இந்த சூப்பர் சுப்பு சீரிஸை மிஸ் செய்யாதீர்கள்

Super Subbu web series | தெலுங்கு சினிமாவில் பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் சந்தீப் கிஷன். இவரது நடிப்பில் காமெடி ட்ராமா பாணியில் உருவாகி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது சூப்பர் சுப்பு என்ற இணையதள தொடர், அது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

கலகல காமெடியில் சந்தீப் கிஷன் நடிப்பில் இந்த சூப்பர் சுப்பு சீரிஸை மிஸ் செய்யாதீர்கள்
சூப்பர் சுப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Jul 2026 20:32 PM IST

தெலுங்கு சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவராக வலம் வருகிறார் நடிகர் சந்தீப் கிஷன். இவர் தொடர்ந்து அதிக அளவில் தெலுங்கு சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வபோது மற்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக சிக்மா படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சை இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலமாக அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் ஒரு காமெடி ட்ராமா பாணியில் இணையதள தொடர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சுப்பு என்ற அந்த இணையதள தொடரை இயக்குநர் மல்லிக் ராம் என்பவர் இயக்கி உள்ளார். மேலும் இந்த இணையதள தொடரில் நடிகர் சந்தீப் கிஷன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். அதன்படி நடிகர்கள் மிதிலா பால்கர், முரளி ஷர்மா, மானசா சௌத்ரி, பிரம்மானந்தம், திவ்யா பிள்ளை, கனிகா மான், கெட்அப் ஸ்ரீனு, கோபராஜு ரமணா, ஹைப்பர் ஆதி, ரகுபாபு, சிவன்நாராயணா நரிபெடி, ஜீவன் குமார், காயத்ரி பார்கவி, சம்பூர்னேஷ் பாபு, கௌதம் ராஜு, ஆனந்த் பாபு, ராசா ரவி, சுஜாபாபு, ராசாக் மற்றும் பிரேம் சாகர் ராஜுலபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

சூப்பர் சுப்பு இணையதள தொடரின் கதை என்ன?

பள்ளி ஆசிரியரின் மகனாக நடிகர் சந்தீப் கிஷன் நடித்து உள்ளார். அவர்தான் இந்த கதையின் சூப்பர் சுப்பு. இவர் சிறு வயதில் இருக்கும் போதே தனது நண்பர்கள் செய்த செயலால் ஒரு காம வெறி பிடித்தவனாக அனைவரின் மனதிலும் ஒரு பிம்பம் ஏற்படுகிறது. தொடர்ந்து ஒரு பள்ளியில் ஆசிரியராக ஆன பிறகும் கூட மற்றவர்கள் செய்யும் தவறின் காரணமாக செக்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவராக தோன்றவைக்கிறார்.

Also Read… துப்பாக்கியில் விஜய்யின் தங்கையாக நடித்தவரா இது.. இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!

இப்படி இருக்கும் சூழலில் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட நம்பாத போது சூப்பர் சுப்புவிற்கு செக்ஸ் தொடர்பான வேலையே கிடைக்கிறது. அதன்படி அதிக அளவில் மக்கள் தொகையை அதிகரித்து வரும் ஒரு கிராமத்திற்கு செக்ஸ் எஜிகேஷனுக்காக ஆசிரியராக செல்கிறார். இவர் அந்த பாடத்தை தன் எடுக்க போகிறார் என்பது அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஏன் அவரை திருமணம் செய்துகொள்ள போகும் பெண்ணிற்கு கூட தெரியாது. அந்த ரசிகசியத்தை சந்தீப் காப்பாற்றினாரா இல்லையா என்பதே இந்த தொடர்ன் கதை. இது தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… சினிமாவில் புது அவதாரம் எடுக்கும் நடிகர் அஜித் குமார்? வைரலாகும் தகவல்

Follow Us