சினிமாவில் புது அவதாரம் எடுக்கும் நடிகர் அஜித் குமார்? வைரலாகும் தகவல்
Actor Ajith Kumar | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற கேள்வியே கடந்த ஒரு வருடமாக இழுத்து வருகின்றது. இந்த நிலையில் அதற்கு ஒரு முடிவு வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் சுமார் 33 வருடங்களாக நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். சினிமாவில் எந்தவிதமான பின்புலனும் இல்லாமல் தனது சொந்த உழைப்பில் இந்த உச்சத்தை எட்டியுள்ளார் நடிகர் அஜித் குமார். தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிப்பில் இதுவரை 63 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அந்த இரண்டு படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகவும் தனது 64-வது படத்திற்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் தொடர்ந்து இந்தப் படத்தின் தயாரிப்பாளர் முடிவாகாத காரணத்தால் ஒரு ஆண்டுகள் ஆகியும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருக்கின்றது. இந்த நிலையில் புது தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




சினிமாவில் புது அவதாரம் எடுக்கும் நடிகர் அஜித் குமார்?
அதன்படி அஜித் குமாரின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவர் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். தற்போது இப்படத்திற்கான ப்ரீ புரடெக்ஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அஜித்தின் மனைவி ஷாலினி, இப்படத்தின் நிதி மற்றும் தயாரிப்புச் செயல்பாடுகளைக் கவனித்து வருகிறார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். படத்திற்கான படப்பிடிப்புத் தளங்களைத் தேர்வு செய்யும் பணிகளும், நடிகர்களைத் தேர்வு செய்யும் பணிகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் ஜன நாயகன் படத்தின் நியூ ட்ரெய்லர் – வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#AjithKumar‘s next film will be produced by Ajith himself, marking his debut as a producer. The team is currently working intensively on the project’s pre-production.
Ajith’s wife, #Shalini, is overseeing the film’s finances and production operations. The film will be directed… pic.twitter.com/q8rutcj0S7
— Movie Tamil (@_MovieTamil) July 15, 2026
Also Read… மலேசியாவில் நடைபெறும் ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச்? வைரலாகும் தகவல்