AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ramayana: புராண காவியம்.. ரன்பீர் கபூர் – சாய் பல்லவியின் ராமாயணா ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

Ramayana Trailer Release: பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகிவரும், பக்தி காவியம்தான் ராமாயணா. இயக்குநர் நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் உருவாகிவரும், இப்படமானது 2026ம் ஆண்டு தீபாவளிக்கு உலகெங்கும் வெளியாகிறது. அந்த விதத்தில், இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Ramayana: புராண காவியம்..  ரன்பீர் கபூர் – சாய் பல்லவியின் ராமாயணா ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?
ராமாயணா டிரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Jul 2026 13:36 PM IST

ஒட்டுமொத்த இந்தியாவையும் எதிர்பார்த்துவரும் பக்தி காவியம் தான் ராமாயணா (Ramayana). பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரியின் (Nitesh Tiwari) இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில், ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் யாஷ் (Yash) போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார். இப்படமானது இந்துக்களின் புராண காவியமான இராமாயணத்தின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இதற்க்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) மற்றும் ஆஸ்கார் விருது வென்ற ஹான்ஸ் ஜிம்மர் (Hans Zimmer ) இணைந்து இசையமைத்துவருகிறார்கள். இப்படமானது இரு பாகங்களாக தயாராகிவரும் நிலையில், முதல் பாகம் 2026ம் ஆண்டில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.ட்ரெய்லர் எப்போது வெளியாகிறது என விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: தனுஷின் தமிழ் முருகன் பட கதை இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்!

ராமாயணா பார்ட் 1 பட ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்:

இந்த ராமாயணா படமானது இரு பாகங்களாக தயாராகிவருகிறது. அந்த விதத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகுவதாக கூறப்படுகிறது. இப்படம் 2026ம் ஆண்டு தீபாவளி, அதாவது நவம்பர் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளதாம். வரும் 2026ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியில் ராமாயணா படத்தின் ட்ரெய்லர் உலகமெங்கும் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பண்டிகையை கொண்டாடுங்கடே… ஜன நாயகன் படத்திலிருந்து ரசிர்கர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

ராமாயணா பார்ட் 1 பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் அறிவிப்பு பதிவு:

ராமாயணா படத்தின் பட்ஜெட்:

இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி தாய் சீதையாகவும் மற்றும் நடிகர் யாஷ் ராவணனாகவும் நடித்துவருகின்றனர். இந்த் ராமாயணா பார்ட் 1 படத்தில் யாஷின் ராவணன் கதாபாத்திரம் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாகிவரும் நிலையில், கிட்டத்தட்ட ரூ 8000 கோடி பட்ஜெட் என க்கூறப்படுகிறது. இப்படத்தின் VFX மற்றும் CGE பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இவ்வளவு பெரிய பட்ஜெட் என கூறப்படுகிறது.

Follow Us