AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jana Nayagan: போடுங்கடா பட்டாச..! ஜன நாயகன் பட ரிலீஸ் தேதியை உறுதி செய்த விநியோகஸ்தர நிறுவனம்!

Jana Nayagan Release Date Confirmed: கோலிவுட் சினிமாவில் உச்ச நடச்சத்திரநாயகனாக இருந்துவந்தவர் முதல்வர் விஜய். இவரின் நடிப்பில் சினிமாவில் கடைசி திரைப்படமாக உருவாகியிருந்ததுதான் ஜன நாயகன். கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பின் இப்படத்திற்கு சென்சார் கிடைத்திருக்கும் நிலையில், இதன் ரிலீஸ் தேதியை வெளிநாட்டு விநியோகஸ்தர நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Jana Nayagan: போடுங்கடா பட்டாச..! ஜன நாயகன் பட ரிலீஸ் தேதியை உறுதி செய்த விநியோகஸ்தர நிறுவனம்!
ஜன நாயகன் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Jul 2026 19:43 PM IST

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்துவந்த பிரம்மாண்ட திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் முன்னாள் நடிகரும், முதல்வருமான தளபதி விஜய் (CM Thalapathy Vijay) நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் “தளபதி 69” (Thalapathy69) என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின் 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தில் “ஜன நாயகன்” என டைட்டிலை படக்குழு பகிர்ந்திருந்தது. இதை இயக்குநர் எச். வினோத் (H Vinoth) இயக்க, கேவிஎன் புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா தயாரித்துவந்தார். இதில் தளபதி விஜய் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருடன் நடிகர்கள் பூஜா ஹெக்டே (Pooja Hegde), மமிதா பைஜூ (Mamitha Baiju), நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி மற்றும் பாபி தியோல் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின் சென்சார் பிரச்சனையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

பல்வேறு பிரச்சனைகளுக்கு பின், கிட்டத்தட்ட 7 மாதத்திற்கு பிறகு ஜன நாயகன் படத்திற்கு “ஏ” தரச் சென்சார் கிடைத்துள்ளது. அந்த விதத்தில் இது குறித்து படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்ற நிலையில், சமீபத்தில் வெளிநாட்டு திரைப்பட விநியோகஸ்தர நிறுவனம் ஒன்று ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க: திருமண பேச்சில் மீண்டும் சிக்கிய பிரபாஸ்.. பொண்ணு யார் தெரியுமா?

ஜன நாயகன் பட ரிலீஸ் தேதியை உறுதிசெய்த விநியோகஸ்தர நிறுவனம்:

ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் உரிமைகளை பல்வேறு நிறுவனங்கள் இணைந்து வாங்கியுள்ளனர். அந்த விதத்தில் இப்படத்தின் UK- ரிலீஸ் உரிமையை பெற்றிருந்த நிறுவனம்தான் அஹிம்சா என்டர்டெயின்மென்ட். இந்த நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் ஜன நாயகன் திரைப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியில் வெளியாகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கிஷன்தாஸூக்கு ஜோடியாகும் சஞ்சனா.. புது பட டைட்டில் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா!

மேலும் UK-வில் ஜன நாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு சிறப்பாக தொடங்கியுள்ளதாம். தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. ஆனால் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இதுவரை எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் பட ரிலீஸ் குறித்து அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

அனிருத்தின் இசையமைப்பில் இந்த படமானது மாஸ் ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், மொத்தம் 4 பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் சில பாடல்கள் இன்னும் வெளியாகாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஜூலை 24ம் தேதியில் இப்படம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us