Jana Nayagan: முதலமைச்சர் விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு கிடைத்தது சென்சார் – குஷியில் ரசிகர்கள்!
Jana Nayagan Film Gets Censor: கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்து, அரசியலில் களமிறங்கி முதலமைச்சரானவர் தளபதி விஜய். இவர் நடித்த கடைசி திரைப்படமானது ஜன நாயகன். இப்படமானது சென்சார் கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ தரச் சென்சார் சான்றிதழை படக்குழு வழங்கியுள்ளது.
தமிழக முதலமைச்சராக தற்போது சிறப்பான பணிகளை செய்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவர் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்துவந்தார். தற்போது இவர் முழுமையாக அரசியலில் இருந்துவரும் நிலையில், இவரின் கடைசி படமாக உருவாகியிருப்பதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தை இயக்குநர் எச் வினோத் (H Vinoth) இயக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் வெங்கட் கே நாராயணன் (Venkat K. Narayana) தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், கடந்த 2025ம் ஆண்டிலே சிறப்பாக முடிவடைந்தது. இதில் முதல்வர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்திருந்தார். மேலும் அவருடன் நடிகர்கள் மமிதா பைஜூ (Mamitha Baiju), நரேன், பிரியாமணி, பாபி தியோல் மற்றும் பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர்.
இப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின் சென்சார் பிரச்சனையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இணையத்தில் லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த விதத்தில், கிட்டத்தட்ட 7 மாதத்திற்கு மேல் சென்சார் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது கிடைத்துள்ளது.




இதையும் படிங்க: திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது த்ரிஷ்யம் 3 – மோகன்லால் நெகிழ்ச்சிப் பதிவு
முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு கிடைத்தது சென்சார்:
கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தமிழக முதல்வராக பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் ஜன நாயகன் படமானது இறுதியாக நடித்திருந்த நிலையில், தற்போது இதற்கு சென்சார் கிடைத்துள்ளது. இப்படத்திற்கு ஏ தரச் சென்சார் கிடைத்துள்ளதாம். இப்படத்திற்கு ஏ தரச் சென்சார் கிடைத்திருக்கும் நிலையில், இதை 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே திரையரங்குகளில் சென்று பார்க்கமுடியும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.
இதையும் படிங்க: எனக்கு அவர் எப்போதும் அண்ணாதான்.. முதல்வர் விஜயை நேரில் சந்தித்த அதர்வா!
தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு சென்சார் குழு கொடுத்த சான்றிதழ் தொடர்பாக வைரலாகும் பதிவு:
#JanaNayagan finally got the censor certificate and will be releasing soon . What a relief to @KvnProductions & Tamil Cinema to bring out the most expected film of our #ThalaivarVijay sir, one last time on big screen 💐👍💪 pic.twitter.com/pEdrTBjtYZ
— G Dhananjheyan (@Dhananjayang) July 9, 2026
ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது:
ஜன நாயகன் படமானது கிட்டத்தட்ட 7 மாதங்களாக ரிலீஸாகாமல் இருக்கிறது. அந்த விதத்தில் இது எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். அந்த விதத்தில் தற்போது இப்படத்திற்கு ஏ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்போது படத்தின் ரிலீஸ் தேதி எப்போது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது வரும் ஜூலை 23ம் தேதி அல்லது ஜூலை 14ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம்.