ஜன நாயகன் பட விநியோகஸ்தர்களுக்கு தளபதி விஜய் போட்ட கண்டிஷன்? வைரலாகும் தகவல்
Thalapathy Vijay strictly instructed distributors | தமிழ் சினிமாவில் அடுத்ததாக மிகவும் பிரமாண்டமாக வெளியாக உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் விநியோகஸ்தர்களுக்கு நடிகர் தளபதி விஜய் ஒரு கண்டிஷனை போட்டு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஆகி உள்ளார் நடிகர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமவில் நாயகனாக நடித்து வரும் போதே தமிழ் நாட்டு மக்கள் அவரை ஒரு நடிகராக மட்டும் இன்றி அவர்களின் வீட்டில் உள்ள ஒரு மகனாக, அண்ணனாக, மாமாவாக உறவு முறை உள்ளவராகவே பார்த்து வந்தனர். இதன் காரணமாக அவர் தமிழ் நாட்டு அரசியலில் ஒரு கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களிடையே ஒரு வாய்ப்பு கேட்டபோது அவர்களும் தங்கள் வீட்டு விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதாக நினைத்து வாக்களித்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும் ஆக்கி உள்ளனர். அதற்கு முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக உருவான படம் ஜன நாயகன்.
இந்தப் படம் தொடர்ந்து சென்சார் பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த பிரச்சனைகள் எல்லாம் முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில் படம் இந்த ஜூலை மாத இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் புதிதா ஒரு தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜன நாயகன் பட விநியோகஸ்தர்களுக்கு தளபதி விஜய் போட்ட கண்டிஷன்?
அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்று விநியோகஸ்தர்களுக்குத் தளபதி விஜய் மற்றும் KVN புரொடக்ஷன்ஸ் குழுவினர் கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். ரசிகர் மன்றக் காட்சிகள் (Fan shows), முதல் நாள் முதல் காட்சி (FDFS) மற்றும் TVK தொண்டர்களால் ஏற்பாடு செய்யப்படும் காட்சிகள் என அனைத்தும் அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே நடத்தப்படும்.
திரையரங்குகளில் சோதனைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய்யும் அரசும் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட திரையரங்கின் உரிமம் ரத்து செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
Also Read… 16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குநராக சசிகுமார்? – வைரலாகும் தகவல்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan BUZZ – #ThalapathyVijay and the team at KVN Productions have strictly instructed distributors not to charge a single extra rupee above the government-permitted ticket price. Even fan shows, FDFS, and shows arranged by #TVK cadres will be conducted at the… pic.twitter.com/O70yr20SPF
— Movies Singapore (@MoviesSingapore) July 7, 2026
Also Read… அப்போ சூர்யா 50 படத்தின் இயக்குநர் நெல்சன் இல்லையா? தயாரிப்பாளர் விளக்கம்



