AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Keerthy Suresh: அவரு இனிமே தளபதி இல்ல.. CM- சார்… முதல்வர் விஜய் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh About CM Vijay: தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் பல உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார். சமீபத்தில் விருதுவழங்கும் விழா ஒன்றில் பேசிய இவர், முதல்வர் விஜய் குறித்து கலகலப்பான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Keerthy Suresh: அவரு இனிமே தளபதி இல்ல.. CM- சார்… முதல்வர் விஜய் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ்!
முதல்வர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 04 Jul 2026 19:56 PM IST

மலையாளம் சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்துவருபவர் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்திவருகிறார். இவர் தமிழில் முன்னாள் நடிகர் விஜய் (Vijay) முதல் சூர்யா (Suriya) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது காதலரான் ஆண்டனி தட்டில் (Antony Thattil) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமணத்தில் பல்வேறு உச்ச நட்சத்திர பிரபலங்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு பின் படங்களில் நடிகர்களுடன் நெருங்கி நடிப்பதை அவர் குறைத்துக்கொண்டார் என கூறலாம்.

இவரின் நடிப்பில் தமிழில் “சத்யவான் சாவித்ரி” (Satyavan Savithri) என்ற படமானது வெளியாக காத்திருக்கிறது. அண்மையில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், முதல்வர் விஜய் (CM Vijay) குறித்து கலகலப்பாக பேசியிருக்கிறார். அவர் அப்படி என்ன சொன்னார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஆப்பிரிக்காவில் நடக்கிறதா அனிருத்தின் திருமணம்? எப்போது தெரியுமா? – வைரலாகும் தகவல்!

விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ்:

அந்த விழாவில், முதல்வர் விஜய்யின் ரசிகர்கள், கீர்த்தி சுரேஷிடம் “தளபதி பற்றி ஏதாவது சொல்லுங்க?” என கேட்டிருந்தனர். உடனே பேசிய கீர்த்தி சுரேஷ், “அவர் இனி தளபதி இல்ல…இப்போது அவர் முதலமைச்சர்” என அதில் அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பான விஷயம் இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அரசன் இதுவரை இல்லாத பெரிய வசூல் சாதனை படைக்கும் – தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு

முதல்வர் விஜய் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியதாக வைரலாகும் எக்ஸ் பதிவு:

தளபதி விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள்:

தளபதி விஜய் தமிழில் இதுவரை கிட்டத்தட்ட 69 படங்களில் நடித்துள்ளார். அதில் அவர் கீர்த்தி சுரேஷுடன் இரு படங்களில் நடித்திருக்கிறார். கடந்தஹ் 2017ம் ஆண்டில் வெளியான பைரவா திரைப்படம் மற்றும் 2018ம் ஆண்டில் வெளியான சர்க்கார் திரைப்படம். இந்த இரு படங்களிலும் தளபதி விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கீர்த்தி சுரேஷ் தமிழில் சூர்யா முதல் சியான் விக்ரம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us