அரசன் இதுவரை இல்லாத பெரிய வசூல் சாதனை படைக்கும் – தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு
Producer Kalaipuli S Thanu About Arasan Movie | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். அவரது நடிப்பில் உருவாகி வரும் அரசன் படத்தினை இயக்குநர் கலைபுலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வருகிறார். மேலும் இந்த அரசன் படத்தை தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு தயாரித்து வருகின்றார். படத்தின் படப்பிடிப்பு கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
மேலும் இந்தப் படம் வட சென்னை பகுதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு சமீபத்தில் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




அரசன் இதுவரை இல்லாத பெரிய வசூல் சாதனை படைக்கும்:
அதன்படி கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது, நான் நேற்று இயக்குனர் வெற்றிமாறனிடம் பேசினேன். படத்தைப் பற்றிய தகவல்களை அவரே பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்—’அரசன்’ திரைப்படம், இதுவரை காணாத வசூல் சாதனையைப் படைத்துத் திரையுலகையே அதிரவைக்கப் போகிறது. இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகச்சிறந்த கலைத்திறனையும் அர்ப்பணிப்பு உணர்வையும் வெளிப்படுத்துகிறது. இப்படம் இணையற்ற வெற்றியைப் பெறவுள்ளது என்று அவர் பேசியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Producer #KalaipuliSThanu on #Arasan:
I spoke with director #VetriMaaran yesterday. The director should be the one to share updates about the film. But I can say this—Arasan will shake the film industry with its unprecedented box office performance. Every single frame reflects… pic.twitter.com/BHMcNtDbNp
— Movie Tamil (@_MovieTamil) July 3, 2026
Also Read… அங்கீகாரம் படக்குழுவை திரையரங்கில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்!