AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Pretiy Mukudhan: பிளாஸ்ட் பட ஆக்ஷன் காட்சியில் நடிக்கும்போது அந்த நடிகரை இன்ஸ்பிரேஷனாக நினைத்தேன் – பிரீத்தி முகுந்தன்!

Preity Mukundan Inspiration: தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் இளம் நாயகியாக பிரபலமானவர் பிரீத்தி முகுந்தன். ஆச கூட என்றார் ஆல்பம் பாடல் மூலம் பிரபலமான இவர், இறுதியாக பிளாஸ்ட் என்ற படத்தில் பிளாஸ்ட்டாக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தில் இவர் நடித்த சண்டை காட்சியில் எந்த நடிகரை நினைத்து நடித்தார் என்பது பற்றி அவரே ஓபனாக பேசியுள்ளார்.

Pretiy Mukudhan: பிளாஸ்ட் பட ஆக்ஷன் காட்சியில் நடிக்கும்போது அந்த நடிகரை இன்ஸ்பிரேஷனாக நினைத்தேன் – பிரீத்தி முகுந்தன்!
பிரீத்தி முகுந்தன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Jul 2026 15:50 PM IST

இளம் கதாநாயகியாக சினிமாவில் பிரபலமாகிவருபவர் பிரீத்தி முகுந்தன் (Pretiy Mukudhan). இவர் தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான இளம் நடிகையாக இருந்துவருகிறார். இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது ஓம் பீம் புஷ் (Om Bheem Bush). 2024ம் ஆண்டில் வெளியான இந்த தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். பின் தமிழில் கவின் நடித்திருந்த ஸ்டார் (Star) படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இந்த படமானது அவருக்கு சிறப்பா வரவேற்பை கொடுத்தது. இந்த வெற்றியை அடுத்தாக 2025ம் ஆண்டில் கண்ணப்பா படத்தில் நிமிலி என்ற வேடத்தில் நடித்தும் வரவேற்கப்பட்டார். இதன் பிறகு மலையாளத்திலும் அறிமுகமானார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம்தான் பிளாஸ்ட் (Blast).

இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், அர்ஜுன் , அபிராமி மற்றும் பிரீத்தி முகுந்தன் இணைந்து நடித்திருந்தனர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரீத்தி முகுந்தன், பிளாஸ்ட் படத்தில் அவர் ஆக்ஷன் காட்சியில் நடிக்கும்போது எந்த நடிகரை மனதில் கொண்டு நடித்தார் என்பது குறித்து பேசிடியுள்ளார்.

இதையும் படிங்க: நடிகைகளை கண்ணியமாக பாருங்க… இது கேவலமாக இல்லையா? – கிரிதி சனோன்!

பிளாஸ்ட் பட தனது ஆக்ஷன் காட்சி இன்ஸ்பிரேஷன் நடிகர் குறித்து பிரீத்தி முகுந்தன்:

அந்த நேர்காணலில் பேசுகையில், “பிளாஸ்ட் படத்தின் சண்டையிடும் காட்சிகளின்போது, தளபதி விஜய் சார்தான் எனக்கு ஒரு உத்வேகமாக (இன்ஸ்பிரேஷன்) இருந்தார். அவரைப்போலவே நான் நடிக்கும் காட்சிகள் கச்சிதமாக இருக்கவேண்டும் என நான் விரும்பினேன்” என அதில் பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் குறித்து பிரீத்தி முகுந்தன் பேசியது தொடர்பாக வைரலாகும் வீடியோ:

நடிகை பிரீத்தி முகுந்தன், பிளாஸ்ட் படத்திற்கு பின் நடித்துவந்த புது படம்தான் இதயம் முரளி. இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் இயக்க, அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் கயாடு லோஹர் மற்றும் பிரீத்தி முகுந்தன் இருவருமே முக்கிய கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: 61வது வயத்தில் மூன்றாவது திருமணம் செய்யும் ஆமீர் கான்… எப்போது தெரியுமா?

இப்படமானது 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இதன் ப்ரோமோஷன் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us