AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்திலிருந்து வெளியானது லேடிஸ் & லேடிஸ் வீடியோ

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள டாக்ஸிக் படத்தில் இருந்து லேடிஸ் அண்ட் லேடிஸ் என்ற வீடியோவை பான் இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்திலிருந்து வெளியானது லேடிஸ் & லேடிஸ் வீடியோ
டாக்ஸிக்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jul 2026 14:52 PM IST

கன்னட சினிமாவில் தற்போது உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவர் தொடர்ந்து கன்னட மொழிப் படங்களில் நடித்து வந்தாலும் மற்ற பான் இந்திய மொழிகள் மற்றும் உலக அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றார். இவர் சின்னத்திரையில் சீரியல்களில் நடிப்பதன் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் படங்கள் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் அந்த மொழி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படி இருக்கும் சூழலில் நடிகர் யாஷின் வாழ்க்கையை வேறு ஒரு உச்சத்திற்கு கொண்டு செல்லும் ஒரு படமாக அமைந்தது அவரது நடிப்பில் வெளியான கேஜிஎஃப். இந்தப் படம் கன்னட மொழியில் வெளியாகி இருந்தாலும் உலக அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது பாகமும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. கன்னட சினிமாவில் அதிகம் வசூல் செய்த படம் இது என்று பெரும் சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

டாக்ஸிக் படத்திலிருந்து வெளியானது லேடிஸ் & லேடிஸ் வீடியோ:

அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் எந்தப் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் டாக்ஸிக் என்ற படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது. மேலும் இந்தப் படத்தில் பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகைகளாக உள்ளவர்களான நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து லேடிஸ் அண்ட் லேடிஸ் என்ற வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… Train: மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி.. ட்ரெயின் படத்தின் டீசர் அப்டேட் இதோ!

டாக்ஸிக் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஸ்கூல் படிக்கும் போது நடந்த ஈவ்-டீஸிங்… மனம் திறந்த நடிகை கயாடு லோஹர்

Follow Us