AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்கூல் படிக்கும் போது நடந்த ஈவ்-டீஸிங்… மனம் திறந்த நடிகை கயாடு லோஹர்

Actress Kayadu Lohar an incident from her childhood | தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கயாடு லோஹர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பள்ளியில் படிக்கும் போது நடந்த ஈவ் டீசிங் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஸ்கூல் படிக்கும் போது நடந்த ஈவ்-டீஸிங்… மனம் திறந்த நடிகை கயாடு லோஹர்
கயாடு லோஹர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jun 2026 16:23 PM IST

தென்னிந்திய சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் நடிகையாக நடித்து வருகிறார் நடிகை கயாடு லோஹர். இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தது என்னவோ கன்னட சினிமாவில் என்றாலும் தற்போது இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகின்றார். அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு முதல் நடிகையாக அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் அடுத்தடுத்து இதயம் முரளி, இம்மார்டல், மஞ்சனத்தி மற்றும் சூர்யா 48 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதில் இதயம் முரளி மற்றும் இம்மார்டல் ஆகிய இரண்டு படங்களும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதன்படி நடிகை கயாடு லோஹர் நடிகர் அதர்வா முரளி உடன் இணைந்து நடித்த இதயம் முரளி படம் வருகின்ற 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து நடிகை கயாடு லோஹர் நடித்த இம்மார்டல் படம் வருகின்ற 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகை கயாடு லோஹர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

சிறு வயதில் தன்னை ஈவ் டீசிங் செய்தவரின் மண்டையை உடைத்த கயாடு லோஹர்:

அதன்படி கயாடு லோஹர் அளித்தப் பேட்டியில் பேசியதாவது, நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பையன் என்னைக் கேலி செய்தான் (eve-teasing). இரண்டு முறை நான் அவனை மன்னித்துவிட்டேன். ஆனால் மூன்றாவது முறை எனக்குக் கோபம் வந்துவிட்டது; நான் ஒரு கல்லை எடுத்து அவன் தலையில் வீசினேன், அதில் அவன் தலை உடைந்து இரத்தம் கொட்டியது. நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். பார்ப்பதற்கு நான் பாவம் போலவும் அமைதியானவளாகவும் தெரியலாம்; ஆனால், யாராவது என்னிடம் தவறாக நடந்துகொண்டால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க நான் தயங்கமாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Shandhanu Bhagyaraj: என் உயிர் வரை நீடிக்கும் நன்றி.. முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பதிவை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!

இணையத்தில் வைரலாகும் கயாடு லோஹரின் பேச்சு:

Also Read… போலீசாக நினைத்து ரவுடியாக மாறியவரின் கதை இது… ஓடிடியில் வெளியாகி உள்ள லிங்கம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Follow Us