AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சர்க்கஸ் கூடாரமாக மாறியது பாக்யராஜின் இறுதி அஞ்சலி நிகழ்வு – வேதனை தெரிவித்த ராதிகா

Actress Radhika Sarathkumar X Post Viral On Social Media | தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராகவும் இயக்குநராகவும் இருந்த பாக்யராஜின் மறைவிற்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது

சர்க்கஸ் கூடாரமாக மாறியது பாக்யராஜின் இறுதி அஞ்சலி நிகழ்வு – வேதனை தெரிவித்த ராதிகா
பாக்யராஜ் மற்றும் ராதிகாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jun 2026 11:26 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பிரபலங்களின் இழப்பு என்பது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஜூன் மாதம் 2026-ம் ஆண்டில் மட்டும் இரண்டு பெரும் இழப்புகள் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. முதலாவதாக இயக்குநர் இமையம் பாரதிராஜா கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு அன்று வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அந்த அதிர்ச்சியில் இருந்து தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மீழ்வதற்கு முன்பாக அடுத்ததாக் கடந்த 27-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும் இன்றி ரசிகர்களிடையே பேரதிர்ச்சியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது எல்லாம் பிரபலங்களின் மறைவு என்பது மிகவும் வைரலான செய்தியாக பார்க்கப்படுகின்றது. அப்படி உருவாக்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலங்களின் துக்க வீட்டிற்கு வரும் திரையுலகினரிடம் போட்டோ எடுப்பது மற்றும் வீடியோ எடுப்பது என அந்த இறுதி நிகழ்வை கேளிக்கையாக மாற்றி வருகின்றனர். இதனை வேதனையுடன் ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த இடம் ஒரு சர்க்கஸ் கூடாரம் போல மாறியது:

மிகவும் சிறப்பான 50 ஆண்டுகால நட்புக்கும், ஒரு சிறந்த படைப்பாளிக்கும், முதிர்ச்சியான எழுத்தாளருக்கும், சினிமாவில் அற்புதமான எல்லைகளை வகுத்தவருக்கும், என்னுடன் பல மகிழ்ச்சியான தருணங்களையும் சிறந்த படைப்புகளையும் பகிர்ந்துகொண்டவருக்கும், அமைதியான மற்றும் உறுதியான விசுவாசத்துடன் என் குடும்பத்திற்கு எப்போதும் துணையாக நின்றவருக்கும் விடை கொடுக்கிறேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இது ஒரு அதிர்ச்சிகரமான விடைபெறல் நிகழ்வாக அமைந்தது. அஞ்சலி செலுத்த வந்தவர்களால், அமைதியாகத் துக்கம் அனுசரிக்கப்பட வேண்டிய அந்த இடம் ஒரு சர்க்கஸ் கூடாரம் போல மாறியது வேதனையானது. நாம் எப்போது, ​​எப்படி இத்தகைய உணர்வற்ற நிலைக்கு மாறினோம்? அரசாங்கமும் திரைத்துறையும் ஒன்றிணைந்து, முறையான வழிகாட்டுதல்களையும் ஒருங்கிணைந்த நிர்வாக நடைமுறைகளையும் வகுத்து, மறைந்த அந்த ஆன்மாவிற்கு உரிய கண்ணியத்தை அளிக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… ஒரு ராஜ்யம் தயாராகி வருகிறது… அரசன் படத்தின் பெரிய ஷெடியூலை முடித்த படக்குழு

ராதிகா சரத்குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் இணைந்த பிரபல நடிகை? வைரலாகும் தகவல்

Follow Us