AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rajinikanth: பாக்யராஜோட பெரிய மைனஸ்.. அந்த படத்தில் அவர் சொன்னதுதான் நான் பண்ணேன் – ரஜினி பகிர்ந்த மறக்கமுடியாத விஷயம்!

Rajinikanth About K Bhagyaraj: தென்னிந்திய சினிமாவில் தற்போதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில், இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் குறித்து பகிர்ந்த சுவாரஸ்ய விஷயங்களை தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Rajinikanth: பாக்யராஜோட பெரிய மைனஸ்.. அந்த படத்தில் அவர் சொன்னதுதான் நான் பண்ணேன் – ரஜினி பகிர்ந்த மறக்கமுடியாத விஷயம்!
ரஜினிகாந்த் மற்றும் கே. பாக்கியராஜ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 28 Jun 2026 08:22 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) தற்போதுவரையிலும் தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்துவருகிறார். இயக்குநர் கே.பாலச்சந்தரால் (K Balachander) சினிமாவில் அறிமுகமான இவர், தற்போது 50 ஆண்டுகளை நாயகனாக கடந்துள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் இதுவரையில் மொத்தம் 171 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த வரிசையில் தற்போது புது திரைப்படங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். ரஜினிகாந்த், இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் “16வயதினிலே” (16 Vayathinile) என்ற படத்தில் கொஞ்சம் நெகடிவ் சார்ந்த வேடத்தில் நடித்திருந்தார். இந்த 16 வயதினிலே படத்தில் இயக்குநர் பாலச்சந்தரின் உதவி இயக்குநராக கே பாக்கியராஜ் (K Bhagyaraj) பணியாற்றியிருந்தார்.

இப்படத்தின் ஷூட்டிங்கின்போது, கே பாக்கியராஜ் தனக்கு சொல்லித்தந்து மற்றும் அப்படத்தில் நடித்த நடிப்பு குறித்து ரஜினிகாந்த் முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். இயக்குநர் கே பாக்யராஜ் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே நல்ல நண்பர்கள் என்ற நிலையில், அவர்களின் சினிமா பயணமும் ஒரே மாதிரியாக தொடங்கியது என் எ கூறலாம்.

இதையும் படிங்க: தலைவரே மைக்-ஆ பிடிச்சி உண்மைய சொல்லவேண்டிய நிலை.. சர்ச்சையை கிளப்பிய விஷ்ணு விஷால்!

16 வயதினிலே படத்தில் பாக்யராஜ் சொல்லி கொடுத்து பற்றி பகிர்ந்து ரஜினிகாந்த்:

அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், “பதினாறு வயதினிலே படத்தில், நான் பாக்யராஜ் சொன்னதையே 90 சதவீதம் செய்தேன். அவரின் வசனம் பேச்சு, அவரின் உடல் மொழியை நான் பின்பற்றியே நான் அந்த பரட்டை என்ற வேடத்தில் நடித்திருந்தேன். “இது எப்படி இருக்கு” வசனத்தை முதலில் நான் சாதாரணமாகவே சொன்னேன், பின் பாக்யராஜ் சொல்லி கொடுத்த ஸ்டைலில் சொன்னே, முதல் டேக்கிலே ஷாட் ஓகே-னு சொல்லிட்டாரு.

இதையும் படிங்க: நடிப்பிலும் இயக்கத்திலும் பல வெற்றிகளைப் பெற்ற பாக்யராஜின் பயணம் – ஒரு பார்வை

அதுபோல சினிமாவில் பாக்யராஜிடம் மைனஸ் ஒன்னு இருக்கு. அது அவரிடம் மட்டுமல்ல, சினிமாவிற்காக உழைக்கும் அனைத்து இயக்குனர்கள் மத்தியிலும் இருக்கு. அவர் திரைக்கதை, சினிமா இயக்குநர் என தனது சொந்த மற்றும் சுய விஷயத்தை பார்த்துக்கொள்ள தவறிவிட்டார். அப்படி அதையும் சேர்த்து அவர் பார்த்திருந்தால். இன்று போயஸ் காட்டனில் 6 வீடு வாங்கிருப்பார்” என அதில் பாக்யராஜ் குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

பாக்யராஜின் மறைவிற்கு ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

பாக்யராஜ் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து பல்வேறு படங்களில் பணியாற்றியிருக்கின்றனர். இயக்குநர் பாக்யராஜ் 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியதோடு, நாயகனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக தமிழில் லவ் அண்ட் வார் என்ற புது படத்தில் ஒப்பந்தமாகியிருந்த நிலையில், சமீபத்தில் அதன் முதல் பார்வையும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், 2026ம் ஆண்டு ஜூன் 27ம் தேதியில் உடல்நல குறைவின் காரணமாக அவர் காலமானார். இது ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

Follow Us