AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

K Bhagyaraj: திரைக்கதை மன்னன் பாக்யராஜின் இறுதி சடங்கு எப்போது? – குடும்பத்தினர் தெரிவித்த விஷயம்!

K Bhagyaraj Funeral: கோலிவுட் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, பின் நடிகராகவும் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கியவர் பாக்யராஜ் . இவர் இன்று (27/06/2026) உடல்நல குருவின் காரணமாக காலமானார். இவரின் மறைவு திரையுலகினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தற்போது இவரின் இறுதிச்சடங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது.

K Bhagyaraj: திரைக்கதை மன்னன் பாக்யராஜின் இறுதி சடங்கு எப்போது? – குடும்பத்தினர் தெரிவித்த விஷயம்!
கே. பாக்யராஜ் இறுதிச் சடங்குImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 27 Jun 2026 16:04 PM IST

ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவின் இழப்பாக இந்த 2026ம் ஆண்டு ஜூன் மாதம் அமைந்துள்ளது என கூறலாம். இயக்குநர் இமையம் பாரதிராஜா (Bharathiraja) கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 10ம் தேதியில், உடல்நல குறைவின் காரணமாக காலமானார். இவரிடம் உதவி இயக்குநராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி வளர்ந்தவர்தான் கே பாக்யராஜ் (K. Bhagyaraj). இவர் உதவி இயக்குநராக பாரதிராஜாவுடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். அந்த வகையில், குருவை தொடர்ந்து, சிஷியனும் காலமானார். ஆமாம் இயக்குநரும், நடிகருமான கே பாக்யராஜ் (73) உடல்நல குறைவின் காரணமாக இன்று 2026ம் ஆண்டு ஜூன் 27ம் தேதியில் காலமானார். இவரின் இறப்பு கோலிவுட் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரை அனைவரும் “திரைக்கதை மன்னன்” மற்றும் “திரைக்கதை ஜாம்பவான்” என அழைக்கப்பட்டுவந்தவர். தற்போது அவரே இல்லை என்ற நிலையில், மேலும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திவருகிறது. இவரின் இறப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்துவருகிறார்கள்.

இதையும் படிங்க: கோலிவுட் முதல் பாலிவுட் வரை… பாக்யராஜின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

மறைந்த கே பாக்யராஜின் இறுதிச்சடங்கு எப்போது, எங்கு நடைபெறுகிறது:

தற்போது இயக்குநர் கே பாக்யராஜின் உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது இவரின் உடலுக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள். மேலும் முதல்வர் விஜய் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்.. திரையுலகில் பெரும் துயரம்

அந்த வகையில், அவரின் உடல் நாளை (28/06/2026) சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுவதாக அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பல நட்சத்திர நடிகர்களும் மற்றும் அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

பாக்யராஜின் மறைவிற்கு முதல்வர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கே பாக்யராஜ் இறுதியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி:

இயக்குநர் கே பாக்யராஜ் இறுதியாக, சுந்தர் சி மற்றும் குஷ்புவின் மக்கள் அவந்திகாவின் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 25ம் தேதியில் கோவாவில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த விழாவில்தான் இறுதியாக கே.பாக்யராஜா தனது குடும்பத்துடன் கலந்துகொண்டிருக்கிறார். இதன் பிறகே உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மாரடைப்பின் காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

Follow Us