AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை… பாக்யராஜின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

Celebrities express condolences over Bhagyarajs passing | பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்த கே. பாக்யராஜ் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு பிரபலங்கள் தொடர்ந்து தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை… பாக்யராஜின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்
பாக்யராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jun 2026 14:26 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி பிறகு இந்தி மொழிகளிலும் படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் கே. பாக்யராஜ். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வந்த இவர் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து உள்ளார். தனது வித்யாசனமான திரைக்கதையின் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமான பாக்யராஜ் ரசிகர்களிடையே மட்டும் இன்றி பிரபலங்களிடையேயும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று உள்ளார். தொடர்ந்து பல பிரபலங்களை இந்த திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்த கே பாக்யராஜ் இன்று தனது 73-வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு அவரது குடும்பம் மற்றும் திரையுலகினரை மட்டும் இன்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாக்யராஜின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கல் பதிவை வெளியிட்டு வருகின்றனர். அதனை தற்போது பார்க்கலாம்.

நடிகரும் முதலமைச்சருமான விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தி:

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.

அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.

இயக்குநர் மோகன்ராஜா வெளியிட்ட இரங்கல் பதிவு:

எனது மானசீக குரு கே. ​​பாக்யராஜ் சார். திரைக்கதைஎன்ற வார்த்தையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவரே; அதன் முக்கியத்துவத்தை திரைத்துறைக்குக் கற்றுக்கொடுத்தவரும் அவரே. சினிமாவையே தன் மூச்சாகக் கொண்டிருந்தவர் இன்று மூச்சற்றுப் போனார் என்பதை நம்பவே முடியவில்லை. ஆனால், அவர் அளித்த உத்வேகம் என்றும் நிலைத்திருக்கும். சகோதரர் சாந்தனு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட இரங்கல் பதிவு:

திரைக்கதை அமைப்பதில் ஒரு மேதை. இந்தியத் திரையுலகம் கண்ட மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவராகவும், ஒவ்வொரு திரைக்கதை எழுத்தாளருக்கும் ஒரு உத்வேகமாகவும் திகழ்ந்தவர். நீங்கள் இனி இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். கே. பாக்யராஜ் சார், உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் இழப்பிற்கு வருந்துகிறேன் சகோதரா.
சாந்தனு.

கமல் ஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தி:

கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.

Also Read… சுந்தர் சி – குஷ்பூ தம்பதியின் மூத்த மகள் திருமணம்… ஒன்று கூடிய பிரபலங்கள்

மம்முட்டி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு:

ஆர்ஐபி பாக்யராஜ். இதயப்பூர்வமான இரங்கல்கள்.

Also Read… அந்த நடிகை மாதிரி என்னால் ஒருநாளும் செய்ய முடியாது – நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி

Follow Us