AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரு சீன் 90 டேக்ஸ் எடுத்துச்சு… வாரணாசி படம் குறித்து பிரித்விராஜ் சுகுமாரன் ஓபன் டாக்

Prithviraj Sukumaran talks about Varanasi movie shooting | பான் இந்திய மொழிகளில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் வாரணாசி படத்தின் படப்பிடிப்பு குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஒரு சீன் 90 டேக்ஸ் எடுத்துச்சு… வாரணாசி படம் குறித்து பிரித்விராஜ் சுகுமாரன் ஓபன் டாக்
பிரித்விராஜ் சுகுமாரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jun 2026 15:40 PM IST

மலையாள சினிமாவில் பழம்பெரும் நடிகர்களின் மகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து பிசியான நாயகனாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் திரையரங்குகளில் தொடர்ந்து நடித்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். மேலும் நடிப்பு மட்டும் இன்றி படங்களை இயக்கும் பணிகளையும் அவ்வபோது செய்து வருகிறார் பிரித்விராஜ் சுகுமாரன். மேலும் இதுவரை பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தகக்து.

மேலும் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அடுத்ததாக மலையாள சினிமாவில் வெளியாக உள்ள படம் ஐ நோபடி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படம் வருகின்ற ஜூலை மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ஈடுபட்டு வரும் நிலையில் தெலுங்கு சினிமாவில் தற்போது நடித்து வரும் வாரணாசி குறித்தும் பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வாரணாசி படம் குறித்து பிரித்விராஜ் சுகுமாரன் ஓபன் டாக்:

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வாரணாசி படத்தில் படமாக்கப்பட்ட ஒரு காட்சிக்காக நடிகர் மகேஷ் பாபுவும் நானும் ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பில் ஈடுபட்டோம். ஆனாலும், அந்தக் காட்சியை எங்களால் சரியாகப் படமாக்க முடியவில்லை. அதனால், அடுத்த நாளும் படப்பிடிப்பைத் தொடர்ந்தோம். இறுதியில், அந்த ஒரே ஒரு காட்சிக்காக 90-க்கும் மேற்பட்ட ‘டேக்’களை எடுக்க வேண்டியதாயிற்று என்று பிரித்விராஜ் சுகுமாரன் தெரிவித்தார். மேலும் ராஜமௌலி அந்த அளவிற்கு தனது படத்தின் காட்சிகளை சிறப்பானதாக மாற்ற முயற்சிப்பார் என்று பிரித்விராஜ் சுகுமாரன் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சத்யவான் சாவித்திரி படத்திலிருந்து ரிப்பிப்பி பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியானது

இணையத்தில் வைரலாகும் பிரித்விராஜ் சுகுமாரன் பேச்சு:

Also Read… ரஜினிகாந்தை இயக்க கிடைத்த வாய்ப்பு – சிம்புவிற்கு நன்றி சொன்ன அஸ்வத் மாரிமுத்து

Follow Us