Sivakarthikeyan: டிசி ஒரு பிளாஸ்ட்.. லோகேஷின் டிசி படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan Praises DC: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் டிசி. இந்த படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், இப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் டிசி படத்தை பாராட்டியுள்ளார். அது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய மக்கள் மத்தியில் இயக்குநராக மிகவும் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவர் தமிழ் சினிமாவில் டிசி (DC) என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (Arun Matheshwaran) இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் கலாநிதிமாறன் தயாரித்திருந்தார். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை திரையரங்குகளில் பெற்றுவருகிறது. இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக வாமிகா கபி (Wamiqa Gabbi) மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி (Sanjana Krishnamoorthy) இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 07ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது.
சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), இப்படத்தை பாராட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: நாளை திரையரங்குகளில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.. கியூட் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
லோகேஷ் கனகராஜின் டிசி படத்தை பார்த்து சிவகார்த்திகேயன் பாராட்டிய விஷயம்:
அந்த பதிவில் சிவகார்த்திகேயன், “டிசி ஒரு அட்டகாசமான படம், ஒரு அற்புதமான சினிமா அனுபவம். லோகேஷ் கனகராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இணைந்து பல விறுவிறுப்பான தருணங்கள் நிறைந்த ஒரு தரமான ஆக்ஷன் படத்தை வழங்கியுள்ளனர். இத்தகைய ஒரு அருமையான படத்தை வழங்கியதற்காக, அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என முழு குழுவிற்கும் வாழ்த்துகள்.
இதையும் படிங்க: பிக் பாஸ் தமிழின் 10வது ஆண்டு.. டாப் 10 வைரல் தருணங்களை வீடியோவாக வெளியீடு!
மேலும் என் அன்பான ராக்ஸ்டார், என் நண்பன் அனிருத். நான் பெருமைப்படுகிறேன் மேக்ஸ்..! நீ உண்மையிலேயே ஈடு இணையற்றவனாகிவிட்டாய், உனக்கென ஒரு சிம்மாசனத்தை உருவாக்கி, அதில் இருந்து ஸ்டைலாக ஆட்சி செய்கிறாய்! உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜின் டிசி படத்தை பாராட்டி சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு:
#Sivakarthikeyan appreciates #DC 💥💥 pic.twitter.com/N0uAlOpqqA
— Balaji (@RDBalaji) August 13, 2026
நடிகர் சிவகார்த்திகேயன் இறுதியாக பராசக்தி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின், தற்போது இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் அப்டேட்டுகளும் விரைவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.