Suriya: நாளை திரையரங்குகளில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.. கியூட் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
Vishwanath & Sons Movie: கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள புத்தம் புது படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படம் நாளை (14/08/2026) திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், கியூட் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் தி ஒன் சூர்யா (The One Suriya). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் கருப்பு (Karuppu). கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகியிருந்த இப்படம், பிளாக் பாஸ்டர் ஹிட்டடித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின், சூர்யாவின் நடிப்பில் வெளியாக தயாராகியிருக்கும் படம் விஸ்வநாத் & சன்ஸ் (Vishwanath and Sons). இதை டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கியுள்ளார். தெலுங்கு இயக்குநரான இவர் நேரடியாக தமிழில் இயக்கியுள்ள முதல் படமாக இந்த விஸ்வநாத் & சன்ஸ் அமைந்துள்ளது. இதில் சூர்யா தொழிலதிபராக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த படமானது முழுக்க முழுக்க பேமிலி மற்றும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் இப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை (14/08/2026) உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு படக்குழு கியூட் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளது. இந்த போஸ்டரை சூர்யா, சார்விக் என்ற குழந்தையுடன் இருப்பது போன்று கியூட்டாக உள்ளது.




இதையும் படிங்க: டேர் டெவில் படத்திற்காக.. மாஸாக ஒர்கவுட் செய்யும் அஜித் – வைரலாகும் வீடியோ!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை பகிர்ந்த படக்குழு:
Just a few more hours to laugh together, feel together and make some beautiful memories together ❤️
This one is for you and your loved ones 🫶🏻#VishwanathAndSons arrives in cinemas worldwide tomorrow 💥💥#VASonAUG14th@Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa… pic.twitter.com/nfcS39mJ2z
— Sithara Entertainments (@SitharaEnts) August 13, 2026
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் பட முதல் காட்சி தமிழகத்தில் எப்போது :
சூர்யாவின் நடிப்பில் 46வது படமாக விஸ்வநாத் & சன்ஸ் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா லீட் நடிகராக “சஞ்சய் விஸ்வநாத்” என்ற வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ “மேடி” (Maddy) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஒரு சில சலுகை எல்லாம் இந்த புது மாப்பிள்ளைக்குதான் கிடைக்கும்… கலகலப்பாக வெளியானது மொத ராத்திரி பட ட்ரெய்லர்!
அதில் மமிதா பைஜூவின் கதாபாத்திரம் மிகவும் ஜாலியான கதாபாத்திரமாக காண்பிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் முதல் காட்சி கர்நாடகாவில் காலை 6 மணி முதல் ஒளிபரப்பாகிறது. ஆனால் தமிழகத்தில் விஸ்வநாத் & சன்ஸ் படம், காலை 9 மணி காட்சிகள் முதல் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு பேமிலி ரசிகர்கள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.