AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அந்த சம்பவத்திற்கு பிறகு என் அப்பா படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன் – நடிகர் சூர்யா ஓபன் டாக்

Actor Suriya talks about his father movies | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது அப்பாவின் படங்களை பார்ப்பதை தவிர்த்த அனுபவம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த சம்பவத்திற்கு பிறகு என் அப்பா படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன் – நடிகர் சூர்யா ஓபன் டாக்
சூர்யா - சிவக்குமார் - கார்த்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Aug 2026 14:18 PM IST

தமிழ் சினிமாவில் இரண்டாம் தலைமுறை நாயகனாக உள்ளார் நடிகர் சூர்யா. இவரது தந்தை பழம்பெரும் நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமாவில் பல நூறு படங்களில் நடித்து உள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்த இவர் தனது மகன்கள் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன பிறகு நடிப்பதில் இருந்து விலகி உள்ளார். அதன்படி சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ள நிலையில் இரண்டாவது மகன் கார்த்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர்கள் இருவரின் நடிப்பிலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் மற்றும் படக்குழுவினர் தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது தந்தையின் படங்களை பார்ப்பதை தவிர்த்து விட்டது குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த சம்பவத்திற்கு பிறகு அப்பா படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன்:

ஒருமுறை என் நண்பரின் குடும்பத் திருமணத்தில் கலந்துகொண்டபோது அந்தச் சூழல் ஏற்பட்டது. அவர் ஒரு அமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்தவர். நான் அழைப்பிதழ் கொடுத்தபோது, ​​நான் யார் என்று அவர் கேட்டார். சிவகுமாரின் மகன் என்று என்னை அறிமுகப்படுத்தினார்கள். அப்போதுதான் நான் நடிப்பில் அடியெடுத்து வைத்திருந்தேன். அதற்கு அந்த அமைச்சர், நீயும் உன் அப்பா செய்வதையேதானே செய்யப் போகிறாய்? என்று கேட்டார். அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. அதனால் நான் என் அப்பாவின் படங்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். அவருடன் எந்தவிதமான ஒற்றுமையும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், எனக்கென ஒரு தனிப் பாதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்தேன் என்று நடிகர் சூர்யா வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைராகி வருகின்றது.

Also Read… செல்லங்களா ரெடியா… தொடங்கியது விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிக்கெட் புக்கிங்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் படத்திலிருந்து வெளியானது ஒரு பேரே வரலாறு பாடல் வீடியோ

Follow Us