AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஐ அம் கேம் படத்திலிருந்து வெளியானது முதல் சிங்கிள் அருகே அருகே – வைரலாகும் வீடியோ

Arugey Arugey song from I am Game Movie | மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஐ அம் கேம். இந்தப் படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.

ஐ அம் கேம் படத்திலிருந்து வெளியானது முதல் சிங்கிள் அருகே அருகே – வைரலாகும் வீடியோ
அருகே அருகே பாடல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Aug 2026 17:47 PM IST

மலையாள சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள சினிமாவில் உச்ச நாயகனாக உள்ள நடிகர் மம்முட்டியின் மகனாக சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மலையாள சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கத் தொடங்கினார். இவர் எந்த கதாபபத்திரத்தை ஏற்று நடித்தாலும் அந்த கதாப்பாத்திரத்தை மிகவும் சிறப்பாக ஏற்று நடித்து மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசைக் கட்டி காத்திருக்கினறது.

அந்த வரிசையில் முதலாவதாக நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஐ அம் கேம். மலையாள மொழியில் உருவாகி உள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 20-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஐ அம் கேம் படத்திலிருந்து வெளியானது முதல் சிங்கிள் அருகே அருகே:

படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் பான் இந்திய மொழிகளில் இந்தப் பாடல் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… Adhik Ravichandran: அஜித்தின் டேர் டெவில் திரைப்படம் அப்படிதான் இருக்கும் – ஆதிக் ரவிச்சந்திரன்!

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… நான் சினிமாவில் நடிகையாக நடிக்கவேண்டும் என்ற முடிவை எடுத்து அப்போதுதான் – மமிதா பைஜூ!

Follow Us