எனது படங்களைப் பார்த்துவிட்டு சூர்யா அண்ணா மெசேஜ் செய்வார் – துல்கர் சல்மான்
Actor Dulquer Salmaan: நடிகர் துல்கர் சல்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் முந்தைய தலைமுறை நடிகர் யார் உங்களது படங்களுக்கு விமர்சனம் கொடுப்பார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு துல்கர் சல்மான் அளித்தப் பதில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து பான் இந்திய அளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் துல்கர் சல்மன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் காந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கி இருந்த நிலையில் படத்தின் திரைக்கதையை தமிழ் பிரபா மற்றும் செல்வமணி செல்வராஜ் ஆகியோர் இணைந்து எழுதி இருந்தனர். மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதன்படி படம் வருகின்ற 14-ம் தேதி நவம்பர் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பீரியட் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்தப் படம் பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போஸ் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சமுத்திரகனி, ராணா டகுபதி, நிழல்கள் ரவி, ரவீந்த்ர விஜய், பகவதி பெருமாள் பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். படம் வெளியாக் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தற்போது விறுவிறுப்பாக் ஈடுபட்டுள்ளது.
சூர்யா அண்ணா படம் பாத்துட்டு மெசேஜ் பண்ணுவார்:
இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதியிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதில் உங்களுக்கு முந்தைய தலைமுறையில் உள்ள நடிகர்கள் உங்களது படங்களைப் பார்த்துவிட்டு பேசுவார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய துல்கர் சல்மான் தனது படங்களைப் பார்க்கும் போது எல்லாம் சூர்யா அண்ணா மெசேஜ் செய்வார் என்று தெரிவித்தார். தொடர்ந்து ராணா டகுபதி பேசியபோது சூர்யா அண்ணா எனக்கு ஒரு பெரிய க்ளாசே எடுப்பார் என்று தெரிவித்து உள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… மெய்யழகன் படத்தில் கமல் ஹாசன் பாடல் பாடியது இப்படிதான் – ஓபனாக பேசிய இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
DEFINITION OF A LOYAL FANBOY! #DulquerSalmaan 🥹📈🛐#Karuppu pic.twitter.com/p018UETL7O
— 𝑹𝑬𝑻𝑹𝑶 𝑺𝑼𝑹𝑰𝒀𝑨 🛐❤️🔥 (@THEDEMON_SFC) November 10, 2025
Also Read… இது வேற லெவல் காமெடி… பிக்பாஸ் வீட்டில் இன்று மன்னர்களை மாற்றிய பிக்பாஸ்



