Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இது வேற லெவல் காமெடி… பிக்பாஸ் வீட்டில் இன்று மன்னர்களை மாற்றிய பிக்பாஸ்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் டாஸ்கில் அரசாட்சி நடைபெறுகிறது. இதில் நேற்றைய டாஸ்கில் கானா வினோத் மற்றும் தர்பீஸ் திவாகர் இருவரும் மன்னர்களாக இருந்த நிலையில் இன்று வேறு மன்னர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இது வேற லெவல் காமெடி… பிக்பாஸ் வீட்டில் இன்று மன்னர்களை மாற்றிய பிக்பாஸ்
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Nov 2025 10:47 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 38-வது நாளை எட்டியுள்ளது. அதன்படி தொடர்ந்து 5 வாரங்கள் முடிவடைந்து தற்போது 6-வது வாரம் சென்று கொண்டிருக்கின்றது. அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இரண்டு சாம்ராஜ்யங்களாக பிரிந்துள்ளது. அதன்படி கானா சாம்ராஜ்யம் மற்றும் தர்பீஸ் சாம்ராஜ்யம் என இரண்டாக பிரிந்து தற்போது வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் பிரிந்து விளையாடுகின்றனர். அதன்படி வீட்டில் உள்ள அனைவரும் மன்னராட்சியில் இருப்பது போத உடை அணிந்து பிக்பாஸ் வீட்டில் வலம் வருகின்றனர். நேற்றைய எபிசோடில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் என்ன மாதிரியான கதாப்பாத்திரம் என்றும் அவர்கள் எந்த அரசவையின் கீழ் எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று கதாப்பாத்திரத்திற்கான விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீடே கலகலப்பாக மாறியது என்று சொல்லலாம்.

இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து 5 வாரங்களாக போட்டியாளர்கள் இடையே கூச்சலும் குழப்பமும் அதிகமாக காணப்பட்டது. மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த சீசன் அதிக அளவிலான நெகட்டிவ் விமர்சனங்களை மக்களிடையே பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 6-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அரசவையில் இருப்பது போல மாறி அந்த கதாப்பாத்திரத்தில் இருப்பது ஒரு காமெடி அரசாட்டியைப் பார்ப்பது போல இருக்கிறது என்று மக்கள் கருத்து  தெரிவித்து வருகின்றனர்.

இன்று பிக்பாஸ் வீட்டில் மாறிய அரசவை:

அதன்படி நேற்று பிக்பாஸ் வீட்டில் கானா சாம்ராஜ்யத்திற்கு கானா வினோத் மன்னராகவும் தர்பீஸ் சாம்ராஜ்யத்திற்கு திவாகர் மன்னராகவும் இருந்த நிலையில் இன்று பிக்பாஸ் இவர்களை மாற்றி அமைத்துள்ளார். அதன்படி கானா சாம்ராஜ்யத்திற்கு விக்ரம் மன்னராகவும் தர்பீஸ் சாமராஜ்யத்திற்கு பார்வதி ராணியாகவும் இருக்க வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற லெனின் பாண்டியன் படக்குழு

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… காந்தா படத்திற்கு வந்த புதிய சிக்கல்… தடை செய்யக்கோரி வழக்கு