Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய் உடல்நலக்குறைவால் காலமானார்

Actor Abhinay Kinger : தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகி தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பலப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நடிகர் அபிநய். இவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய் உடல்நலக்குறைவால் காலமானார்
நடிகர் அபிநய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Nov 2025 11:55 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் துள்ளுவதோ இளமை. இயக்குநர் செல்வராகவன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தார். செல்வராகவனும் இயக்குநராக அறிமுகம் ஆன படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் அபிநய். இவர் இந்தப் படத்தில் இரண்டாம் நாயகனாக அறிமுகம் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த நடிகர் அபிநய் மலையாள சினிமாவில் நடிகர் பகத் பாசில் நாயகனாக அறிமுகம் ஆன கையெத்தும் தூரத்து படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் அபிநய்.

அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து மாறி மாறி நடித்து வந்தார் நடிகர் அபிநய். அதன்படி தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிகர் அபிநய் நடிப்பில் வெளியான சக்சஸ், சிங்கார சென்னை, தாஸ், பொன் மேகலை, தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும், பாலைவன சோலை, ஆறுமுகம், கதை, ஆரோகனம், என்றென்றும் புன்னகை மற்றும் வல்லவனுக்கு புள்ளும் ஆயுதம் ஆகியப் படங்களில் தொடர்ந்து நடித்துள்ளார். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் நடிகர் அபிநய் அதனைத் தொடர்ந்து எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் அபிநய்:

தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் காட்சியளிக்காத அபிநய் புகைப்படங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி வைரலானது. அதில் அவர் உடல் எடையை மிகவும் குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தார். மேலும் தனது மருத்துவ செலவிற்கே சிரமமாக உள்ளதாக அவர் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து அவருக்கு பலரும் உதவி வந்தனர். இந்த நிலையில் 44 வயதைக் கொண்ட நடிகர் அபிநய் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு திரையுலகிலும், ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… சார்பாட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அமேசான் ப்ரைம் வீடியோவில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய க்ரைம் த்ரில்லர் சீரிஸ் தஹாத்