18 ஆண்டுகளைக் கடந்தது தனுஷின் சூப்பர் ஹிட் பொல்லாதவன் படம் – கொண்டாடும் ரசிகர்கள்
18 Years Of Polladhavan Movie: நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி முதன் முதலாக அமைந்தது இந்த பொல்லாதவன் படத்தில் தான். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் கடந்த 8-ம் தேதி நவம்பர் மாதம் 2007-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பொல்லாதவன். இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இதுதான் அவர் தமிழில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ரம்யா நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் டேனியல் பாலாஜி, கிஷோர், முரளி, பானுப்ரியா, சந்தானம், கருணாஸ், பவன், பாய்ஸ் ராஜன், சேத்தன், அகிலா, சென்ட்ராயன், அஞ்சு, மனோபாலா, டேனியல் அன்னி போப், மூணார் ரமேஷ், பூனம் பஜ்வா, பிருந்தா பரேக், யோகி பி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளியான இந்த பொல்லாதவன் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகளைக் கடந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு விறுவனமான குரூப் கம்பெனி சார்பாக தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




பொல்லாதவன் படத்தின் கதை என்ன?
மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த நடிகர் தனுஷ் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதால் அப்பாவிடம் தொடர்ந்து திட்டுவாங்கிக்கொண்டிருக்கிறர். இப்படி இருக்கும் போதே ஹீரோயினை காதலித்து வருகிறார். ஒரு கட்டத்தில் வீட்டில் அடம் பிடித்து தனக்கு பிடித்த பல்சர் பைக்கை வாங்கிறார். அந்த பைக் வாங்கிய பிறகு தனுஷிற்கு வேலை கிடைக்கிறது, காதலும் கைகூடி வருகிறது.
இதன் காரணாம அந்த பைக் மீது மிகவும் எமோஷ்னலாக இருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த நிலையில் அந்த பைக் ஒருநாள் காணாமல் போய்விடுகிறது. அதனை தேடும் போது அந்த ஊரிலேயே பெரிய கேங்ஸ்டர் கும்பலுடன் பகை ஏற்படுகின்றது. இறுதியில் அனைத்து பிரச்னைகளையும் எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் கதை.
Also Read… இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷனா? இணையத்தில் கவனம் பெறும் தவகல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#18YearsOfPolladhavan#Polladhavan @dhanushkraja @divyaspandana @DanielBalaje @gvprakash #VetriMaaran @kathiresan_offl @5starcreationss #DhanushUHD_Offl pic.twitter.com/nwk4lPz7fK
— Dhanush Ultra HD Pics (@dhanushUHD_offl) November 8, 2025
Also Read… இது தளபதி கச்சேரி நாள்… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட புது வீடியோ!