இது தளபதி கச்சேரி நாள்… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட புது வீடியோ!
Thalapathy Katcheri: தளபதி விஜயின் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் காத்திருக்கும் படம் ஜன நாயகன். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் தளபதி விஜய் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக நடிகர் விஜய் நடித்தப் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிகர் விஜய் நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் ஸ்நேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி இருவரும் நடித்து இருந்தனர். படம் கலவையான விமர்சனத்தைப் பெற்று இருந்த நிலையில் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜயின் 69-வது படத்தை யார் இயக்க உள்ளது என்று பல கேள்விகள் கோலிவுட் சினிமாவில் வலம் வந்த நிலையில் பிரபல இயக்குநர் எச்.வினோத் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தப் படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் தொடர்பான அறிவிப்புகளும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன்ஸ் தயாரித்து வருகின்ற நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




இன்று மாலை வெளியாகிறது தளபதி கட்சேரி பாடல்:
நடிகர் விஜயின் ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த ஜன நாயகன் படம் வருகின்ற 9-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று 08-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு ஜன நாயகன் படத்தில் இருந்து முதல் பாடலை மாலை படக்குழு வெளியிடுகின்றது.
இந்த நிலையில் தற்போது ஜன நாயகன் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் முன்னதாக வெளியான விஜயின் நடிப்பில் முன்னதாக வெளியான படங்களில் இருந்து எந்த முதல் சிங்கிள் உங்களுக்கு பிடிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பைசன் படத்தின் வெற்றியை ஊர் மக்களுக்கு விருந்து வைத்து கொண்டாடிய மாரி செல்வராஜ்
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#ThalapathyKacheri day 🔥
Which Thalapathy first single brings back your core memory?#JanaNayaganFirstSingle from today 6.03 PM ♥️#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412… pic.twitter.com/ltpOPqMbO1
— KVN Productions (@KvnProductions) November 8, 2025
Also Read… D 54 படப்பிடிப்பில் நடிகர் தனுஷ்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!