AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி.. எப்போது அறிவிக்கப்படுகிறது தெரியுமா? வெளியான தகவல்!

Tamil Nadu Assembly Election Dates: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் மத்தியில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நடவடிக்கையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இறங்கி உள்ளதாகவும் தெரிகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி.. எப்போது அறிவிக்கப்படுகிறது தெரியுமா? வெளியான தகவல்!
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 18 Feb 2026 09:17 AM IST

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே 10- ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதேபோல, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஜூன் 15- ஆம் தேதியும், மேற்குவங்க சட்டப்பேரவைக்கு மே 7- ஆம் தேதியும், அசாம் சட்டப்பேரவைக்கு மே 20- ஆம் தேதியும், கேரளா சட்டப்பேரவைக்கு மே 23- ஆம் தேதியும் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்த 5 மாநிலங்களுக்கும் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக, மாநில கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் தேதிக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு, வருகிற சட்டமன்றத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது

அதன்படி, சட்டமன்றத் தேர்தல் தேதிக்கான அறிவிப்பு அடுத்த மாதம் மார்ச் 2 அல்லது 3- ஆவது வாரத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 5 மாநிலங்களுக்கும் பிப்ரவரி 26- ஆம் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த மாநிலங்களில் பள்ளிகளில் இறுதி தேர்வுகள் நடைபெறும் என்பதால், மாநில அரசுகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: கொலை வழக்கு.. 21 பேருக்கு முதலில் விடுதலை.. பின்னர் ஆயுள் தண்டனை.. 13 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பு தீர்ப்பு!

தமிழகத்தில் எத்தனை கட்டங்களாக தேர்தல்

கடந்த தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் குழு ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த பயணத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், அரசு துறை ஊழியர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு

தற்போது, தேர்தல் தயார் நிலையை மதிப்பீடு செய்வதற்காக அசாம் மாநிலத்தில் துணை தேர்தல் ஆணையர் குழு முகாமிட்டுள்ளது. இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் பிப்ரவரி 23- ஆம் தேதி ( திங்கள்கிழமை) வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் வெளியானதை தொடர்ந்து, தேர்தல் தேதிகள் இறுதி செய்யப்பட்டு அதற்கான அறிவிப்புகளை இந்தய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: சூடுபிடிக்கும் அரசியல் கள.. அடுத்த மாதம் இரண்டு முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி.. தே.ஜ கூட்டணியில் வியூகம் என்ன?