பைசன் படத்தின் வெற்றியை ஊர் மக்களுக்கு விருந்து வைத்து கொண்டாடிய மாரி செல்வராஜ்
Mari Selvaraj: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிஐயே மாபெரும் வரவேற்பைப் பெற்றது பைசன் காலமாடன் படம். இந்தப் படத்தின் வெற்றியை ஊர் மக்களுக்கு கறி விருந்து அளித்து கொண்டாடி உள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj). இயக்குநர் ராம் இடம் உதவியாளராக பணியாற்றிய இவர் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல அடுத்தடுத்து இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இவரது இயக்கத்தில் 5-வதாக தமிழ் சினிமாவில் வெளியான படம் பைசன் காலமாடன். மனத்தி கணேசன் என கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான் இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேசுவரன் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் துருவ் விக்ரமிற்கு அக்காவாகவும், அப்பாவாக நடிகர் பசுபதி நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் லால், அமீர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சொந்த ஊரில் உள்ள மக்களுக்கு கடா விருந்து அளித்துள்ளார். இது குறித்து மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பைசன் காளமாடனின் இந்த அத்துமீறிய வெற்றி இந்த மனிதர்களாலே சாத்தியமானது:
அந்தப் பதிவில் மாரி செல்வராஜ் கூறியதாவது, பைசன் (காளமாடன்)படப்பிடிப்பு பணிகளில் என்னோடு சேர்ந்து எனக்காகவும் என் படத்திற்காகவும் பெரும் அர்பணிப்போடும் பெரும் தோழமையோடும் சேர்ந்து உழைத்த நெல்லை தூத்துக்குடி மாவட்ட கிராம மக்கள், கபடி வீரர்கள், கபடி பயிற்சியாளர்கள், ஊர் பெரியவர்கள், தாய்மார்கள், அண்ணன்கள், அக்காக்கள் ,தங்கைகள், தம்பிகள், மற்றும் என் நண்பர்கள் அனைவரையும் நேரில் போய் சந்தித்து பைசனுக்கு கிடைத்த இந்த வெற்றியையும் என் இதயம் நிரம்பிய நன்றியையும் அன்பையும் பகிர்ந்து மகிழ்ந்தேன். பைசன் காளமாடனின் இந்த அத்துமீறிய வெற்றி இந்த மனிதர்களாலே சாத்தியமானது.
Also Read… ஊதித் தள்ள நான் ஒன்னும் மண்ணு இல்லை… மலை – வெளியானது துல்கர் சல்மானின் காந்தா பட ட்ரெய்லர்!
இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
பைசன் (காளமாடன்)படப்பிடிப்பு பணிகளில் என்னோடு சேர்ந்து எனக்காகவும் என் படத்திற்காகவும் பெரும் அர்பணிப்போடும் பெரும் தோழமையோடும் சேர்ந்து உழைத்த நெல்லை தூத்துக்குடி மாவட்ட கிராம மக்கள், கபடி வீரர்கள், கபடி பயிற்சியாளர்கள், ஊர் பெரியவர்கள், தாய்மார்கள், அண்ணன்கள், அக்காக்கள்… pic.twitter.com/m03jJBDoj2
— Mari Selvaraj (@mari_selvaraj) November 6, 2025
Also Read… அஜித்துடன் கூட்டணி… லோகேஷ் கனகராஜ் சொன்ன விசயம் – வைரலாகும் வீடியோ



