Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நவம்பர் மாதம் இத்தனை படங்கள் ரீ ரிலீஸ் ஆகிறதா? லிஸ்ட் இதோ

November Month Re Release Movies: இந்த நவம்பர் மாதத்தில் பல புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. அதே நேரத்தில் இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ரீ ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியளும் அதிகமாக உள்ளது. இந்தப் படங்களைப் மீண்டும் திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.

நவம்பர் மாதம் இத்தனை படங்கள் ரீ ரிலீஸ் ஆகிறதா? லிஸ்ட் இதோ
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Nov 2025 21:43 PM IST

நாயகன்: உலக நாயகன் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி 1987-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நாயகன். இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் எழுதி இயக்கி இருந்தார். க்ரைம் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் தற்போது சினிமாவில் நுழைந்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பலருக்கும் இது ஒரு நூலகம் என்று கூறுவார்கள். அப்படி கமல் நடிப்பில் வெளியான பலப் படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 38 ஆண்டுகளைக் கடந்த நிலையில் படம் வருகின்ற 6-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.

ஆட்டோகிராஃப்: இயக்குநர் சேரன் எழுதி இயக்கி நாயகனாக நடித்தப் படம் ஆட்டோகிராஃப். இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி 2004-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் வெளியாகி 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் வருகின்ற 14-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.

Also Read… மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

ஃப்ரண்ட்ஸ்: நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா முன்னணி வேடத்தில் நடித்து இருந்த படம் ஃப்ரண்ட்ஸ். இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி 2001-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்தப் படம் வெளியாகி 24 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் வருகின்ற 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஞ்சான்: நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியான படம் அஞ்சான். இயக்குநர் லிங்குசாமி எழுதி இயக்கி இருந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை சமந்தா நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தினை வருகின்ற 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… அல்லு அர்ஜுன் படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைப்பாளரா? வைரலாகும் பதிவு