அல்லு அர்ஜுன் படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைப்பாளரா? வைரலாகும் பதிவு
Allu Arjun: இந்திய சினிமாவில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் மிகப்பெரிய படம் AA22xA6. இந்தப் படத்தை இயக்குநர் அட்லி இயக்க நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது.
                                இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் (Actor Allu Arjun) நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு தற்போது AA22xA6 என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படம் சயின்ஸ் ஃபிக்சன் பாணியில் உருவாகி வருகின்றது. இந்தப் படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரித்து வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகை தீபிகா படுகோன் நாயகியாக் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் மேலும் சில பிரபல நடிகைகள் நடிக்க வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்காக வெளிநாட்டு கலைஞர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர், இது உலக தரம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்தப் படம் குறித்து தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதிகாரப்பூர்வ தகவல்கள் பெரிய அளவில் வெளியாகவில்லை என்றாலும் சினிமா வட்டாரங்களில் அவ்வபோது தகவல்கள் கசிந்து வருகின்றது. அதன்படி இந்தப் படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. ஆனால் இதுகுறித்து படக்குழு எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.




அல்லு அர்ஜுன் படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைப்பாளரா?
இந்த நிலையில் இந்த AA22xA6 படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளார் என்பதை உறுதி செய்யும் விதமாக நடிகர் அல்லு அர்ஜுனின் எக்ஸ் தள பதிவு உள்ளது. ஆம் இன்று இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இன்று அவரது 21-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வாழ்த்து தெரிவித்து பதிவை வெளியிட்டு இருந்தார்.
அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, என் சகோதரர் SAK அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! வரும் ஆண்டில் உங்கள் அனைவருக்கும் வெற்றியும் பெருமையும் பெருகட்டும் என்று வாழ்த்துகிறேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… மீண்டும் இணைந்தது சுந்தர் சி – விஷால் கூட்டணி… அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
அல்லு அர்ஜூன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Many happy returns of the day to my brother SAK ! Wishing you all the success and glory to unfold in the coming year. @SaiAbhyankkar 🖤
— Allu Arjun (@alluarjun) November 4, 2025
Also Read… மிடில் கிளாஸ் படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் ரவி மோகன் – வைரலாகும் வீடியோ