AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரீ ரிலீஸாகும் உயிருள்ளவரை உஷா… சிம்பு வெளியிட்ட வாழ்த்துப் பதிவு!

Actor Silambarasan X Post: தமிழ் சினிமாவில் வருகின்ற பிப்ரவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற காதல் படங்கள் ரீ ரிலீஸாக உள்ள நிலையில் உயிருள்ளவரை உஷா படமும் ரீ ரிலீஸாகிறது.

ரீ ரிலீஸாகும் உயிருள்ளவரை உஷா… சிம்பு வெளியிட்ட வாழ்த்துப் பதிவு!
சிலம்பரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Feb 2026 20:58 PM IST

தமிழ் சினிமாவில் இந்த வாரம் காதலர் தினத்தை முன்னிட்டு பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்ற காதல் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி காதலர் தினத்தை முன்னிட்டு மின்னலே, காதலர் தினம், மௌனம் பேசியதே ஆகியப் படங்களுடன் இணைந்து டி ராஜேந்தரின் இயக்கத்தில் எழுதி இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா படமும் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி 1983-ம் ஆண்டு திரையரங்குகலில் வெளியான உயிருள்ளவரை உஷா படம் சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆக உள்ளது. இது தற்போது உள்ள 2கே கிட்ஸ்கள் மட்டும் இன்றி பல 90ஸ் கிட்ஸ்களே பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவு என்றே கூறலாம்.

இந்த நிலையில் இந்த உயிருள்ளவரை உஷா படம் திரையரங்குகளில் வெளியாவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் டி.ராஜேந்தர், சரிதா, கங்கா, நளினி, ராதா ரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோகர், கவுண்டமணி, எஸ்.எஸ்.சந்திரன், செல்வராஜ், உசிலை மணி, காந்திமதி, சாவித்திரி, கலைச்செல்வி, சந்திரா என பலர் நடித்து இருந்தனர். இந்த நிலையில் படம் நாளை 13-, தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் மீண்டும் ரீ ரிலீஸ் ஆக உள்ள நிலையில் நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உயிருள்ளவரை உஷா படத்திற்கு சிம்பு வெளியிட்ட வாழ்த்துப் பதிவு:

உயிருள்ளவரை உஷா நாளை முதல் திரையரங்குகளுக்குத் திரும்புகிறார். அதன் ராவான உணர்ச்சி, சக்திவாய்ந்த நடிப்புகள் மற்றும் மறக்க முடியாத இசை தருணங்களுடன், இந்தப் படம் பார்வையாளர்கள் மத்தியிலும் என்னிடமும் தொடர்ந்து ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இந்த உன்னதமானது மீண்டும் ஒருமுறை அதன் தகுதியான வழியில் கொண்டாடப்படட்டும் என்று நடிகர் சிலம்பரசன் அந்த எக்ஸ் தள பதிவில் வெளியிட்டு இருந்தார்.

Also Read… கதை ரெடி… அடுத்து டைரக்‌ஷன் தான் – சசிகுமார் கொடுத்த மாஸ் அப்டேட்

இணையத்தில் வைரலாகும் சிலம்பரசன் எக்ஸ் தள பதிவு:

Also Read… நீங்க எல்லாவற்றையும் புரிந்துகொள்ள இது போதுமானது… பூக்கி பட ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

Follow Us