AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு Vs கர… ஒரே நாளில் தியேட்டரில் மோதும் சூர்யா, தனுஷ் படங்கள்!

Suriya Vs Dhanush: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் சூரியா மற்றும் தனுஷ். இவர்கள் இருவரின் படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கருப்பு Vs கர… ஒரே நாளில் தியேட்டரில் மோதும் சூர்யா, தனுஷ் படங்கள்!
கருப்பு Vs கரImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Feb 2026 18:27 PM IST

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே தொடர்ந்து நடிகர்களின் படங்கள் போட்டிப் போடுவது வழக்கமாக உள்ளது. அதன்படி அந்தப் படங்கள் போட்டிப் போடுவது போல அவர்களின் ரசிகர்களும் தொடர்ந்து போட்டிப் போடுவார்கள். அதன்படி தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையிலும் புதுப் புதுப் படங்கள் வெளியாகி வருகின்றது. கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் மட்டும் பலப் படங்கள் வெளியானது. அதில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் கார்த்தி, ஜீவா மற்றும் சிவகார்த்திகேயனின் படங்கள் வெளியானது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் விஜய், சூர்யா, ரஜினிகாந்த், தனுஷ், சிலம்பரசன் ஆகியோரின் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் முன்னணி நடிகர்கள் படங்கள் திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டால் அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷின் படங்களான கருப்பு மற்றும் கர ஆகியப் படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

ஒரே நாளில் தியேட்டரில் மோதும் சூர்யா, தனுஷ் படங்கள்:

அதன்படி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டே திரையரங்குகளில் வெளியாக இருந்த கருப்பு படம் இந்த 2026-ம் ஆண்டில் ஏப்ரம் மாதம் 10-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நாளில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இவர்களின் படங்கள் ஒரே நாளில் போட்டிப் போட உள்ள நிலையில் எந்தப் படம் வெற்றிப் பெறும் என்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read… டாக்ஸிக் காதலால் ஏற்படும் சிக்கல்… இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது மணிகண்டனின் லவ்வர் படம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சர்வம் மாயா வெற்றியைத் தொடர்ந்து அதிரடி படத்தில் இணைந்த ரியா ஷிபு… வைரலாகும் போஸ்டர்

Follow Us