நீங்க எல்லாவற்றையும் புரிந்துகொள்ள இது போதுமானது… பூக்கி பட ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் ஆண்டனி!
Pookie Movie Trailer: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வரும் விஜய் ஆண்டனி தற்போது தயாரித்து இசையமைத்துள்ள படம் பூக்கி. இந்தப் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகினறது. தொடர்ந்து முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுவது போல இளம் நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி வருகின்ற வாரமும் பலப் புதுப்படங்கள் மற்றும் முன்னதாக ஹிட் அடித்த படங்கள் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் மார்கன் படத்தின் மூலம் பிரபலமான அஜய் திஷன் நாயகனாக நடித்துள்ள படம் பூக்கி. இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோ மற்றும் ஸ்னீக் பீக் வீடியோக்கள் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இந்தப் படத்தில் தற்போதைய இளைஞர்களின் காதல் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துள்ளனர் என்பது வீடியோக்களை பார்க்கும் போது தெரிகிறது. மேலும் அந்த காதல் முறிவு ஏற்படும் போது எப்படி எல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்பது குறித்தும் இந்தப் படத்தில் பேசியுள்ளனர். இந்த நிலையி படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் தற்போது விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.




பூக்கி பட ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் ஆண்டனி:
இந்த நிலையில் பூக்கி படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 13-ம் தேதி 2026-ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று விஜய் ஆண்டனி வெளியிட்ட பூக்கி படத்தின் ட்ரெய்லரில் சிம்புவிற்கு நன்றி தெரிவித்து உள்ளனர். மேலும் காதல் தோல்விக்கு பிறகு பெண்கள் மற்றும் ஆண்கள் என்ன செய்வார்கள் என்பதை அந்த வீடியோவில் காட்டியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி மக்கலிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றனர்.
Also Read… சூப்பர் ஹிட் அடித்த ஃபர்சி சீரிஸ் பார்ட் 2 குறித்த அப்டேட் கொடுத்த இயக்குநர்கள்
விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The trailer of #POOKIE is here 💔
Just enough to make you think you’ve understood everything. You haven’t 😏2 days to go | In cinemas worldwide from FEB 13 🌍#PookieTheMovie #AjayDhishan #RKDhanusha #VijayAntony pic.twitter.com/E8jsC7x3x1
— vijayantony (@vijayantony) February 11, 2026
Also Read… வித் லவ் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ