கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது ரவி மோகனின் தீபாவளி படம்!
19 Years Of Deepavali Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் முன்னதாக இவரது நடிப்பில் வெளியான தீபாவளி படம் தற்போது 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 09-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தீபாவளி. இந்தப் படத்தை இயக்குநர் எழில் எழுதி இயக்கி இருந்தார். ரொமாண்டிக் ஆக்ஷன் படமாக வெளியான இந்த தீபாவளி படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை பாவனா நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரகுவரன், லால், விஜயகுமார்,
கொச்சி ஹனீபா, மனோபாலா, வையாபுரி, ஜான் அமிர்தராஜ், போஸ் வெங்கட், மகாநதி சங்கர், பெசன்ட் ரவி, என். ராதாகிருஷ்ணன், கஜினி ராஜேஷ், தேவதர்ஷினி, ஜானவி, மீனாள், கிருஷ்ணமூர்த்தி, ரோபோ சங்கர், பங்கி சங்கர், மாறன், கூல் சுரேஷ்,
லொள்ளு சபா உதயகுமார், மாயி சுந்தர், சூரி, அப்புக்குட்டி, கடுகு ராமமூர்த்தி, கோவை செந்தில், சுசீந்திரன் என பலர் இந்தப் படத்தில் நடித்திள்ளனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான திருப்பதி ப்ரதர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் என்.லிங்குசாமி மற்றும் என். சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்களும் படத்தைப் போலவே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி பாடலாசிரியர் நா முத்துகுமார் வரிகளில் யுவனின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
19 ஆண்டுகளை நிறைவு செய்தது ரவி மோகனின் தீபாவளி படம்:
பெங்களூருவின் நடைப்பெற்ற ஒரு விபத்தின் தனது அம்மாவை இழந்த நாயகி பாவனா சென்னையில் உள்ள தனது அப்பாவின் உதவியாளர் வீட்டிற்கு வருகிறார். அந்த பகுதியில் மிகவும் பிரபலமானவராக இருக்கிறார் விஜயகுமாரின். அவரின் மகன் ரவி மோகனும் தந்தையை போல மிகவும் பிரபலமானவராக இருக்கிறார்.




Also Read… D55 Movie: தனுஷின் ‘டி55’ படத்தின் ஷூட்டிங் பூஜை.. படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்!
சென்னைக்கு வந்த பாவனா மற்றும் ரவி மோகன் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறுகிறது. விபத்தில் பழைய நினைவுகளை இழந்த பாவனா மீண்டும் பழைய நினைவிற்கு வரும் போது நினைவு இழந்து இருந்த போது நடைப்பெற்ற விசயங்கள் அனைத்தும் மறந்துவிடுகிறது. அப்போது ரவி மோகனுடனான காதலும் மறந்துபோக அதனை எப்படி அவருக்கு புரியவைத்து தனது காதலில் வெற்றிப்பேற்றார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
Also Read… Jana Nayagan: தளபதி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ‘ஜன நாயகன்’ பட ரிலீஸில் புது திருப்பம்!