நான் நடிகராக கட்டாயப்படுத்தப்பட்டேன்… நடிகர் ரவி மோகன்
Actor Ravi Mohan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் இவர் வில்லனாக நடித்து வெளியான பராசக்தி படமும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் மூத்த திரைப்படத் தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் மோகனின் மகன்கள் மோகன் ராஜா மற்றும் ரவி மோகன். இதில் மூத்த மகன் மோகன் ராஜா இயக்குநராக சினிமாவில் வலம் வரும் நிலையில் அவரது இளைய மகன் ரவி மோகன் நாயகனாகவும் வலம் வருகின்றனர். அதன்படி ரவி மோகன் அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இது தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி மோகன் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார் நடிகர் ரவி மோகன்.
அதன்படி ரவி மோகன் நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், கோமாளி, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, காதலிக்க நேரமில்லை என பல ஹிட் படங்களில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் தற்போது நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்து உள்ள பராசக்தி படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.




நான் நடிகராக கட்டாயப்படுத்தப்பட்டேன்:
இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் பிரபல யூடியூபிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், என் தந்தை ஒரு தயாரிப்பாளராகவும், என் சகோதரர் ஒரு இயக்குநராகவும் இருந்ததால், நான் நடிப்புத் துறைக்குள் தள்ளப்பட்டேன். அதனால், என்னால் ஒரு கதாநாயகனாக ஆக முடியும் என்று என் குடும்பத்தினர் நம்பினார்கள். பின்னர், நான் எப்படியும் சினிமா துறையில் தான் இருக்கப் போகிறேன் என்பதால் கல்லூரியில் விஸ்காம் படிப்பைத் தேர்ந்தெடுத்து படித்தேன். பின்பு மும்பையில் உள்ள ஒரு நடிப்புப் பள்ளிக்குச் சென்றேன் என்றும் நடிகர் ரவி மோகன் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Also Read… சாண்ட்ராவின் உண்மை முகம் தெரிந்ததும் கோபப்படும் திவ்யா… வைரலாகும் வீடியோ
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் ரவி மோகனின் பேச்சு:
#RaviMohan Recent
– I was pushed into the acting field because my father was a producer and my brother was a director, so my family believed I could become a hero 🎬🌟
– Later, I chose visual communication and went to acting school in Bombay #Parasakthipic.twitter.com/3WUXXO3mCe— Movie Tamil (@_MovieTamil) January 11, 2026
Also Read… சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் புக்கிங்கை தொடங்கியது படக்குழு – வைரலாகும் அப்டேட்