Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாண்ட்ராவின் உண்மை முகம் தெரிந்ததும் கோபப்படும் திவ்யா… வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது பணப் பெட்டி டாஸ்க் உடன் செலிபிரேஷன் வாரமும் நடைப்பெற்று வருகின்றது. இதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து முன்னதாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

சாண்ட்ராவின் உண்மை முகம் தெரிந்ததும் கோபப்படும் திவ்யா… வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jan 2026 14:48 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது 96-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தொடர்ந்து போகப் போக நிகழ்ச்சி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இறுதிப் போட்டியில் 6 பேர் மட்டுமே உள்ளனர். இதில் யார் இறுதிப் போட்டியில் வெற்றியடைவார்கள் என்பது குறித்து பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் கடந்த வாரம் முழுவதும் நடைப்பெற்ற டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் அரோரா வெற்றிப் பெற்ற நிலையில் இந்த வாரம் மற்ற 5 போட்டியாளர்கள் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் யார் வெளியேறுவார்கள் என்பது குறித்து இந்த வார இறுதியில் தெரியவரும்.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி வாரமாக மட்டும் இல்லாமல் செலிபிரேஷன் வாரமாகவும் உள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து முன்னதாக வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர். உள்ளே சென்ற போட்டியாளர்கள் தங்களுக்குள் இருக்கும் மன வருத்தத்தை தொடர்ந்து பேசி வருகின்றனர்.

சாண்ட்ராவின் உண்மை முகம் தெரிந்ததும் கோபப்படும் திவ்யா:

இந்த நிலையில் வெளியில் இருந்து வந்த போட்டியாளர்கள் திவ்யா குறித்து சாண்ட்ரா மற்றவர்களிடம் எப்படி எல்லாம் தவறாக பேசினார் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட திவ்யாவிற்கு இவளையா தோழி என்று நினைத்தோம் என்று வருத்தப்படுவதுடன் சாண்ட்ராவை பாதுகாப்பதற்காக மிளகாய் சாப்பிட்டதை நினைத்து கோபமும் அடைகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Sudha Kongara: சூரரைப் போற்று படத்திற்கு பின்.. அப்படி வந்ததுதான் பராசக்தி – சுதா கொங்கரா பேச்சு!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Sivakarthikeyan: ரவி மோகன் சார் வெரி வெரி பேட் பாய்.. நிகழ்ச்சியில் கலகலப்பாக பேசிய சிவகார்த்திகேயன்!