Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Parasakthi: பராசக்தி படத்தின் வெளிநாட்டு டிக்கெட் புக்கிங் கேன்சல்.. தள்ளிபோகிறதா ரிலீஸ் தேதி?

Parasakthi Overseas Tickets Cancel: சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் பராசக்தி. இந்த படமானது 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு டிக்கெட் புக்கிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிபோகிறதா? என ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துவருகிறது.

Parasakthi: பராசக்தி படத்தின் வெளிநாட்டு டிக்கெட் புக்கிங் கேன்சல்.. தள்ளிபோகிறதா ரிலீஸ் தேதி?
பராசக்தி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Jan 2026 19:15 PM IST

பிரபல இயக்குநரான சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கத்தில், தமிழ் மொழியை மையமாக கொண்டு உருவாக்கியுள்ள பிரம்மாண்ட திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார். இவர் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் லீட் ரோலில் நடிக்க, நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) அசத்தல் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் அதர்வா, ராணா மற்றும் பேசில் ஜோசப் உட்பட பல்வேறு பிரபலங்களும் சிறப்பான வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில்,வரும் 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த படமானது வெளிநாடுகளிலும் வெளியாகிற நிலையில், இதன் நெதர்லாந்து (Netherlands) நாட்டில் டிக்கெட் புக்கிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்தவர்களுக்கு 10 நாட்களில் டிக்கெட் பணமும் திருப்பி அனுப்பப்படும் என கூறப்படுகிறது. இதனால் ஜன நாயகன் திரைப்படத்தை போல இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிபோகிறதா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

இதையும் படிங்க: தொடர் இழுபறியில் பராசக்தி படத்தின் சென்சார் விவகாரம்… குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகுமா படம்?

பராசக்தி பட நெதர்லாந்து டிக்கெட் முன்பதிவு கேன்சல் குறித்து வைரலாகும் பதிவு:

இந்த படத்தின் நெதர்லாந்து முன்பதிவு நிறுத்திவைக்கப்பட்டதன் காரணம் இதுவா:

சிவகார்த்திகேயனின் பராசக்தி படமானது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் பிரத்தியேகமாக திரையிடப்படுவதால் நெதர்லாந்தில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் லண்டன் டிக்கெட் ப்ரீ-புக்கிங் இன்னும் நிறுத்திவைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பராசக்தி படத்தின் UK டிக்கெட் முன்பதிவு குறித்த வெளியான பதிவு :

ஜன நாயகன் மற்றும் பராசக்தி போன்ற படங்களில் UK பட ரிலீஸ் உரிமையை அஹிம்சா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனமானது பெற்றிருந்தது. மேலும் சமீபத்தில் தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படமானது அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இந்நிறுவனமும் ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பதக்கவும், முன்பதிவு செய்தோருக்கு மீண்டும் அவர்களின் பணம் திருப்பி அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பொங்கலுக்கு வெளியாகிறதா கார்த்தியின் வா வாத்தியார் படம்? வைரலாகும் தகவல்

அதன்படி பலருக்கும் முன்பணம் மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது என்பது குறித்து படக்குழு எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும் பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது என எதிர்பார்க்கப்படுகிறது.