Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் சென்சார் பிரச்சனை… தளபதி விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய கோலிவுட் சினிமா

Jana Nayagan Movie Censor Issue: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் ஜன நாயகன். இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருந்தது. ஆனால் தணிக்கைச் சான்றிதழ் பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலரும் கண்டித்ததுடன் விஜய்க்கு ஆதராவக குரல் கொடுத்து வருகின்றனர்.

ஜன நாயகன் சென்சார் பிரச்சனை… தளபதி விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய கோலிவுட் சினிமா
தளபதி விஜய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jan 2026 16:36 PM IST

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டு ம் இன்றி பிரபலங்கள் பலரும் தற்போது சோகத்தில் இருக்க ஜன நாயகன் படத்தின் வெளியீடு தள்ளிப்போனதே ஆகும். அதன்படி தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள இந்த ஜன நாயகன் படம் 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் இந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கவில்லை. இதன் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்ப்பட்டது. தொடர்ந்து படத்தின் வெளீட்டை தள்ளி வைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பிரபலங்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பலரும் தங்களது வருத்தத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். அதில் தமிழ் சினிமா பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அன்புள்ள நடிகர் விஜய் அண்ணா, பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை. இதைவிடப் பெரிய புயல்களையெல்லாம் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும், ஜன நாயகன் வெளியாகும் நாளன்றுதான் உண்மையான திருவிழா தொடங்குகிறது என நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சாந்தனு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

ஜன நாயகன் வெளியீட்டைச் சுற்றி நடப்பவற்றைக் கண்டு மனம் உடைந்துவிட்டேன்.
யாராக இருந்தாலும் சரி, அனைத்து ரசிகர்களும் பார்வையாளர்களும் சரியானதிற்காக ஜன நாயகன் படக்குழுவுடன் துணை நிற்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நடிகர் விஜய் அண்ணா, ஒரு சகோதரனாக நான் உங்களுக்குத் துணையாக நிற்பேன், மேலும் பார்வையாளர்களாகவும் ரசிகர்களாகவும் ‘நாங்கள்’ உங்களுக்குத் துணையாக நிற்போம் என்று நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

என்ன நடந்தாலும் சரி!! இது இந்தியத் திரையுலகிலேயே மிகப்பெரிய பிரியாவிடை நிகழ்வாக இருக்கப் போகிறது ஜன நாயகன் படம் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ரத்ன குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இயக்குநர் ரத்ன குமார் கூறியதாவது, கடந்த சில மாதங்களாக பெரிய படங்கள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. தமிழ் திரையுலகம் பெரும் ஆபத்தில் இருக்கிறது. நடிகர் விஜய் சார் மற்றும் ‘ஜன நாயகன்’ குழுவினரே, மன உறுதியுடன் இருங்கள். கோவிட் காலங்களில் நீங்கள் தமிழ் சினிமாவை மீட்டெடுத்தீர்கள். நீங்கள் இதை கடைசி முறையாக மீண்டும் செய்வீர்கள் என்று எங்களுக்குத் தெரியும் என தெரிவித்து இருந்தார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இயக்குநர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, இது அதிகாரத்தின் அப்பட்டமான துஷ்பிரயோகம். எந்தவொரு திரைப்படமும் ஒருவரை மட்டும் சார்ந்தது அல்ல; ஒரு படம் திரைக்கு வர நூற்றுக்கணக்கான மக்களின் உழைப்பும், பணமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. படக்குழுவினருக்கு எங்கள் முழு ஆதரவு. இது தளபதியின் படம், அவருடைய கடைசிப் படம், இதை நாங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கொண்டாடுவோம் என்று தெரிவித்து இருந்தார்.

Also Read… முன்னாள் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் கொளுத்திப்போட்ட விசயம்… அனல் பறக்கும் வீடியோ!

நடிகர் ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இதயம் நொறுங்கிவிட்டது. நடிகர் விஜய் அண்ணா உங்கள் தம்பியாக மற்ற தம்பிகளுடன் இணைந்து நானும் நிற்கிறேன். ஜன நாயகன் படம் எப்போது வெளியாகிறதோ அப்போதான் உண்மையான பொங்கல் என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

Also Read… தளபதி விஜய் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா சொன்ன விசயம்… வைரலாகும் தகவல்